விஜய் மகன் இப்போ எப்படி இருக்கார் பாருங்க!! திருமணத்தில் எடுத்த புகைப்படம் வைரல்..



actor-vijay-son-sanjai-viral-photos

இயக்குனர் சங்கர் மகள் திருமண விழாவில் நடிகர் விஜய்யின் மகன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

இயக்குனர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யாவுக்கு சமீபத்தில் இரண்டாவது திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அவர் துணை இயக்குனர் தருண் கார்த்திகேயன் என்பவரை கரம் பிடித்தார். சங்கர் மகள் திருமணம் என்பதால் திருமண நிகழ்ச்சிக்கு சினிமா துறையை சேர்ந்தவர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் நேரில் கலந்துகொண்டனர்.

vijay

இந்த விழாவில் பிரபல நடிகர் விஜயின் மனைவி சங்கீதாவும் கலந்துகொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது. இந்நிலையில் விஜய்யின் மகன்  சஞ்சய்யும் கலந்துகொண்டு, அங்கு அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

குறும்படங்களை இயக்கிவரும் சஞ்சய், விரைவில் வெள்ளித்திரையில் ஹீரோவாக அறிமுகமாலாம் என எதிர்பார்க்கப்படும்நிலையில், தற்போது அவரது இந்த புகைப்படம் அந்த ஆர்வத்தை மேலும் அதிகரிக்க செய்துள்ளதாக விஜயின் ரசிகர்கள் கமெண்ட் செய்துவருகின்றனர்.

vijay