சல்மான்கான் வீட்டில் துப்பாக்கியால் சுட்ட விவகாரம்; விசாரணை கைதி தற்கொலை.! 



Bollywood Actor Salman Khan House Shot out case Accuse Anuj Suicide Died 

 

பாலிவுட் நடிகர் சல்மான் கானின் மும்பை இல்லத்திற்கு அருகே, கடந்த ஏப்ரல் 14ம் தேதி மர்ம நபர்களால் துப்பாக்கிசூடு நடத்தப்பட்டது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய 2 குற்றவாளிகள் விசாரணைக்கு பின்னர் கைது செய்யப்பட்டனர். 

அனுஜ் தாப்பான், சுபாஷ் சந்தர் ஆகியோர் ஏப்ரல் 25ம் தேதி அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். கைதுக்கு பின்னர் சிறையில் அடைக்கப்பட்ட இவர்களிடம், மும்பை காவல்துறையினர் நீதிமன்ற அனுமதியுடன் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இன்று அணுஜிடம் அதிகாரிகள் விசாரணை நடத்திவந்தபோது, அவர் தற்கொலைக்கு முயற்சித்தார். உடனடியாக மீட்கப்பட்ட அவர் ஜியார்ஜ் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி செய்யப்பட்டு இருந்தார்.

இந்நிலையில், அனுஜ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு உண்டாகி இருக்கிறது.