அறுவை சிகிச்சையில் உடல் எடை குறைக்கும் முயற்சியில் தோல்வி; தனியார் நிறுவன ஐடி ஊழியர் பரிதாப பலி.!

அறுவை சிகிச்சையில் உடல் எடை குறைக்கும் முயற்சியில் தோல்வி; தனியார் நிறுவன ஐடி ஊழியர் பரிதாப பலி.!



Pondicherry IT Employee Died in Chennai When Surgery Weight Loss Process 


புதுச்சேரி மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட ஐடி நிறுவன ஊழியர் ஹேமசந்திரன் (வயது 26). இவர் தற்போது சென்னை பம்பலில், வீட்டில் இருந்தபடி பணியாற்றி வருகிறார். உடல் எடையுடன் காணப்பட்டு வந்த ஹேமசந்திரன், அதனை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார். 

கடந்த பிப்ரவரி மாதம் யூடியூபில் அவர் தனியார் மருத்துவமனை சார்பில் ஒளிபரப்பு செய்யப்பட்ட யூடியூப் விடீயோவை பார்த்து இருக்கிறார். அதில் கூறப்பட்டவாறு உடல் எடையை அறுவை சிகிச்சை செய்து குறைக்கலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளார். 

இதற்கான தொகையாக ரூ.8 இலட்சம் சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் செலுத்தி ஏப்ரல் 23ல் அறுவை சிகிச்சை தொடங்கப்பட்டுள்ளது. ஆனால், சிகிச்சையின் போதே திடீரென ஹேமசந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த அவரின் தந்தை, தற்போது மருத்துவமனை நிர்வாகத்திற்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.