உயர்ஜாதி கோவிலுக்குள் சென்ற தலித் இளைஞர் தூக்கிலிட்டு கொலை?; வைரல் வீடியோவின் உண்மை என்ன?.!



Rajasthan Dalit Youth Hanged Video Fake Declare by Rajasthan Police 

 

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த தலித் இளைஞர் நாராயண் தாஸ் என்பவர், அங்குள்ள உயர்ஜாதி கோவிலுக்குள் சென்றதால் பொதுமக்கள் முன்னிலையில் தூக்கிலிடப்பட்டதாக சமீபத்தில் வீடியோ ஒன்று வெளியாகி வைரலானது. 

இந்த வீடியோ தலித் ஆர்வலர்கள் என்று வருணிக்கப்படும் நபர்களால் அதிகம் பகிரப்பட்டு மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கடுமையான குற்றசாட்டுகள் முன்வைக்கப்பட்டன. 

இந்நிலையில், இந்த விடியோவுக்கு விளக்கம் அளித்துள்ள ராஜஸ்தான் மாநில காவல்துறை, மேற்கூறியவாறு சம்பவம் எதுவும் நடைபெறவில்லை. உண்மைக்கு மாறான தகவலை பரப்ப வேண்டாம்.

இத்தகவலை பரப்பிய நபரை கண்டறிந்து வருகிறோம். விரைவில் அவர் கைது செய்யப்பட்டதும் உண்மையான காரணம் என்பது தெரியவரும் என அதிகாரிகள் தரப்பில் விளக்கம் அளித்துள்ளனர்.

போலியான வைரல் வீடியோ உங்களின் பார்வைக்கு இணைக்கப்பட்டுள்ளது.