தினமும் இரவில் வெண்டைக்காயை நீரில் ஊற வைத்து சாப்பிட்டால், உடலில் இவ்வளவு மாற்றங்கள் ஏற்படுமா.!?



Benefits of drinking ladies finger soaked water

பொதுவாக காய்கறிகள் என்பது நம் உடலுக்கு பலவகையான ஊட்டச்சத்துக்களை அளிப்பவையாகவே இருந்து வருகின்றன. இதில் குறிப்பாக வெண்டைக்காய் என்பது மூளை வளர்ச்சிக்கு மிகவும் நல்லது என்று சிறுவயதிலிருந்தே நம் பெற்றோர்கள் நமக்கு அதிகமாக உணவில் தருகின்றனர். ஆனால் இந்த வெண்டைக்காயை பச்சையாக நீரில் ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் உடலில் பல்வேறு வகையான மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதைக் குறித்து இப்பதிவில் விளக்கமாக பார்க்கலாம்?

வெண்டைக்காய்

முதலில் 4 வெண்டைக்காயை எடுத்துக்கொள்ள வேண்டும். இதனை நன்றாக கழுவி தலை மற்றும் வாள் பகுதியை வெட்டி விட்டு நீல்வாக்கில் வெட்டி ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நான்கு வெண்டைக்காய்களையும் போட்டு எட்டு மணி நேரத்திற்கு ஊற வைத்துக் கொள்ளவும். இந்த ஊற வைத்த நீரை மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வரவேண்டும். இந்த வெண்டைக்காய் ஊற வைத்த நீரினால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன தெரியுமா.!?

1. கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு இரத்த சிவப்பணுக்கள் குறைவாக இருந்தால் இந்த வெண்டைக்காய் நீரை குடித்து வரலாம். இதனால் உடலில் ஹீமோகுளோபின் அதிகரிக்கும்.
2. வரட்டு இருமல், தொண்டை வலி, ஆஸ்துமா, நுரையீரல் பாதிப்பு போன்ற பிரச்சனைகள் இருப்பவர்கள் வெண்டைக்காயை ஊற வைத்த நீர் குடித்து வந்தால் நுரையீரலில் உள்ள நச்சுக்கள் நீங்கி சுத்திகரிக்கப்படும்
3. வெண்டைக்காயில் அதிக அளவு இன்சுலின் நிரம்பி இருப்பதால் சர்க்கரை நோயாளிகள் வெண்டைக்காய் ஊற வைத்த தண்ணீரை குடித்து வந்தால் சர்க்கரை நோய் கட்டுப்படும்.

வெண்டைக்காய்

4. திடீரென்று தீவிர வயிற்றுப்போக்கு பிரச்சனை ஏற்பட்டால் வெண்டைக்காயை ஊற வைத்து தண்ணீரை குடித்து வரலாம். இது வயிற்றுப்போக்கினால் அதிகமாக வெளியேறும் மினரல்களை உற்பத்தி செய்வதோடு, வயிற்றுப்போக்கையும் கட்டுப்படுத்துகிறது.

5. வெண்டைக்காய் ஊற வைத்த தண்ணீரை தினமும் காலையில் குடித்து வந்தால் உடல் எடையை குறைத்து, கொழுப்பை கட்டுப்படுத்துவதோடு, இதய பாதுகாப்பையும் மேம்படுத்துகிறது. இவ்வாறு தலை முதல் கால் வரை பல்வேறு நன்மைகளையுடைய வெண்டைக்காய் ஊற வைத்த தண்ணீரை அடிக்கடி குடித்து வருவது உடல் நலத்திற்கு நல்லது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.