தலையில் உள்ள பேன் ஈறுகளை ஒழிக்க, இந்த வீட்டு வைத்திய மருந்துகளை ட்ரை பண்ணி பாருங்க.!?



Home remedies for cure lice

பொதுவாக பலரது தலையிலும் காணப்படும் அழுக்குகள், பொடுகுகள், பேன்கள், ஈறுகள் போன்றவை சாதாரணமானது தான். ஆனால் இது அளவுக்கு அதிகமானால் பலவிதமான தொல்லைகளை ஏற்படுத்தும். நம் தலையில் உள்ள அழுக்குகளை உண்டு உயிர் வாழ்பவை தான் பேன்கள் மற்றும் ஈறுகள். இவற்றை நீக்குவதற்கு பலவிதமான ரசாயன மருந்துகள் இருந்தாலும் இது பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவையாகவே இருந்து வருகின்றது. எனவே சாதாரண வீட்டு வைத்தியம் முறைப்படி எப்படி இந்த பேன், ஈறுகளை ஒழிக்கலாம் என்பதை குறித்து பதிவில் விளக்கமாக பார்க்கலாம்?

Lice

1. அரளி பூ - அரளி பூவை எடுத்துக்கொண்டு இதனை நீரில் இரவு முழுவதும் ஊறவைத்து காலையில் அரைத்து தலையில் தடவி குளித்து வர வேண்டும். இவ்வாறு குளித்து வந்தால் தலையில் உள்ள ஈறு, பேன் தொல்லைகள் நீங்கும்.
2. துளசி மற்றும் எலுமிச்சை சாறு - ஒரு கைப்பிடி அளவு துளசியை மிக்ஸி ஜாரில் தண்ணீர் ஊற்றி பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின்பு இந்த பேஸ்ட்டில் எலுமிச்சை சாறு சேர்த்து தலையில் தேய்த்து அரை மணி நேரம் ஊற வைத்து குளித்து வந்தால் ஈறுகள், பேன்கள் மற்றும் பொடுகு தொல்லையும் நீங்கி தலை சுத்தமாகும்.

Lice

3. வேப்பிலை - ஒரு கப்பில் வேப்பிலையை எடுத்து நன்றாக கழுவி விட்டு மிக்சி ஜாரில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கலவையாக நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதனை குளிக்க செல்வதற்கு 1 மணி நேரத்திற்கு முன்பு தலையில் தேய்த்து குளித்து வந்தால் தலையில் உள்ள ஈறு, பேன்கள் போன்றவற்றின் தொல்லைகள் ஒழியும். இவ்வாறு ஒரு சில வீட்டு வைத்திய குறிப்புகளை வைத்து எளிதாக தலையை சுத்தமாக வைத்துக் கொள்ளலாம்.