மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அந்த விஷயத்தில் சிறந்து விளங்க ஆசையா? நீங்கள் செய்ய வேண்டியது என்ன?.!
திருமணம் முடிந்த தம்பதிகள் தங்களின் எதிர்கால சந்ததிக்காகவும், தங்களுக்கு இடையேயான அன்பை பரஸ்பரம் மேலும் மெருகூட்ட தாம்பத்தஹியாத்தில் ஈடுபடுவது உண்டு. இன்றளவில் இளம் தலைமுறை என்பது செல்போன் மோகத்தால் அதிக எதிர்பார்ப்பு, போதைப்பழக்கம், பாலியல் நடத்தை மாற்றங்கள் என பல விஷயங்களை எதிர்கொள்கிறது.
இதனால் உளவியல் ரீதியான பல்வேறு பிரச்சனைகளையும் சந்தித்து வருகிறது. இது தம்பதிகளுக்கு இடையேயான தாம்பத்திய விஷயத்திலும் நேரடி மற்றும் மறைமுக தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இவ்வாறான விஷயத்தை சரிசெய்ய முதலில் ஒவ்வொருவரும் நல்வழிப்படவேண்டியது அவசியம். அதுவே கட்டில் இன்பத்தில் கூடுதல் நன்மையை வழிவகுக்கும்.
போதை கட்டில் போருக்கு ஆப்பு வைக்கும்
எந்த ஒரு போதைப்பழக்கமும் இன்றி, உடற்பயிற்சி செய்து உடலை இருவரும் கட்டுக்கோப்புடன் வைத்திருப்பது பல்வேறு நன்மைகளை வழிவகுக்கும். அதேபோல, இருவரும் கட்டில் இன்பத்தில் தங்களின் விருப்பத்தை கேட்டறிந்து நிவர்த்தி செய்யும் சூழலுக்கு பழக்கப்பட்ட வேண்டும். இது இருவருக்கும் இடையேயான அன்பை அதிகரிக்கும்.
மிக முக்கியமாக தாம்பத்தியத்தில் முடிந்தளவு செயற்கை உணர்வூட்டிகளை தவிர்க்க வேண்டும். இவை பின்னாளில் ஒட்டுமொத்த உணர்வுக்கும் உலையாக அமைந்து, எதிர்காலத்தை சீரழித்துவிடும். பிடிக்காத விஷயங்களை கட்டிலில் செய்யச்சொல்லி வற்புறுத்தவும் கூடாது. பரஸ்பரம் அன்பை பகிர்ந்து தாம்பத்தியம் மேற்கொள்வதே சிறந்தது.