உடலுறவுக்கு பின் உங்களுக்கு உடல்நலம் சரியில்லாமல் போகுதா?.. காரணம் என்ன?.. தம்பதிகளே தெரிஞ்சிக்கோங்க.!
தம்பதிகள் தங்களுக்கு இடையேயான நெருக்கத்தை உடல் அளவிலும், மனதளவிலும் அதிகரிக்க உடலுறவு மேற்கொள்கின்றனர். இதில் தம்பதிகளுக்கு இடையேயான உடலுறவு என்பது அவர்களின் உணர்ச்சியை பொருத்தது. ஒவ்வொருவருக்கும் ஹார்மோன் தூண்டப்பட்டு எப்போது உடலுறவு மேற்கொள்ள வேண்டும் என்று இருக்கிறதோ அப்போது உணர்ச்சிகளை வெளிப்படுத்தி சந்தோஷமாக இருப்பார்கள்.
இது உடலில் உள்ள மகிழ்ச்சிக்கான ஹார்மோன்களுடன் தொடர்பு கொண்டதாகும். உடலுறவுக்கு பின்னர் உடல்நலம் சரியில்லாமல் போனால் என்னென்ன காரணம் என்பது குறித்து இனி காணலாம். பொதுவாகவே இருபாலருக்கும் உடல் சூடு, வியர்வை போன்றவை உடலுறவின் போது இருக்கும். உடலில் போதிய நீரேற்றம் இல்லாத பட்சத்தில் உடலுறவுக்கு பின் கடுமையான உடல் வறட்சியானது ஏற்படும்.
இதனால் குமட்டல், தலை சுற்றல் போன்றவையும் ஏற்படும். கருப்பை வாயில் ஏற்படும் அழுத்தம் காரணமாகவும் பெண்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் செல்லலாம். சிறுநீர் பாதை பிரச்சனை தொற்று இருப்பவர்களுக்கு உடலுறவுக்கு பின் வலி அல்லது உடலுறவு காரணமாக வலி போன்றவை ஏற்படலாம். மன அழுத்தம், பதற்றம் போன்ற பிரச்சனை உள்ளவர்களுக்கு உடலுறவுக்கு பின் திடீரென அசௌகர்ய சூழல் ஏற்படலாம்.
இதனால் உடல்நலம் பாதிக்கப்படலாம். நீண்ட நேரம் உடலுறவு கொள்ளும் பட்சத்தில், உடல்நிலை சரியில்லாமல் போக வாய்ப்புள்ளது. மூன்றில் இரண்டு விழுக்காடு பெண்கள் உடலுறவில் உச்சத்தை அடைவதற்காக போராடுகின்றனர் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன. இவ்வாறான பல பிரச்சனைகளை தவிர்ப்பதற்கு, உடலுறவில் பிறப்புறுப்பு ஊடுறுவல் இருக்கும் பட்சத்தில் அது கடினமாக இல்லாததை கவனத்தில் கொள்ள வேண்டும்.
அசௌகரிய சூழ்நிலை இருந்தால் அதனை துணையிடம் தெரிவிக்க வேண்டும். சௌகரியமாக இருந்தால் மட்டுமே உடலுறவு மேற்கொள்ள வேண்டும். கட்டாயம் என்பது இருக்கக்கூடாது. உடலுறவில் தீவிரம் என்பதை தவறான ரீதியில் புரிந்து கொண்டு செயல்படக் கூடாது. அதிக தண்ணீர் குடிக்க வேண்டும்.