மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தம்பதிகள் தாம்பத்திய உறவை தவிர்க்க வேண்டியது எப்போது?... காரணம் என்ன?..!
திருமண பந்தத்தில் இணைந்த தம்பதிகள் தாம்பத்தியத்தில் இணைவது இயல்பானதே. ஆனால், சில நேரங்களில் தம்பதிகள் தாம்பத்தியத்திற்கு இடைவெளி விடவேண்டிய நாட்கள் வரும். அவை எதற்காக? எந்தெந்த நாட்கள் என்பது குறித்து இன்று காணலாம்.
மனைவி கர்ப்பமாக இருக்கும் போது, முதல் மூன்று மாதங்கள் மற்றும் இறுதி மூன்று மாதங்கள் கட்டாயம் தாம்பத்தியம் கூடாது. இடைப்பட்ட மாதங்களில் மனைவியின் விருப்பம் இருந்தால் மட்டுமே, அவரின் உடல்நிலை ஒத்துழைக்கும் பட்சத்தில் தாம்பத்தியம் வைத்துக்கொள்ளலாம். எக்காரணம் கொண்டும் கர்ப்பிணி மனைவியை கட்டாயப்படுத்தி உறவு கூடாது. அவ்வாறு கட்டாயப்படுத்தி மனைவியுடன் நெருங்கினால் மனைவியின் உடல், மனநலம் கேள்விக்குறியாவது மட்டுமல்லாது குழந்தையின் மனநிலையும் பாதிக்கப்படும்.
பிரசவத்திற்கு பின்னர் தம்பதிகள் இணைய 3 மாதங்கள் முதல் 8 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. பெண்ணுக்கு பிரசவம் சுகப்ரசவமா? அறுவை சிகிச்சை பிரசவமா? என்பதை பொருத்தும், பிரசவத்தின் போது ஏற்படும் காயம் மற்றும் அறுவை சிகிச்சை காயங்களின் தன்மையை பொறுத்து இம்மதங்கள் தீர்மானிக்கப்படும்.
இயல்பாக குழந்தைப்பேறுக்கு பின்னர் பெண்ணின் கருப்பை சுருங்கி இயல்பு நிலையை அடைய 6 வாரங்கள் எடுத்துக்கொள்ளும். பெண்களின் உடல்நிலையை பொறுத்து இந்த வாரங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். குழந்தை பிறப்பின் போது பெண்ணின் பெண்ணுறுப்பில் காயம் ஏற்பட்டு இருக்கும் பட்சத்தில், அவை சரியாகும் வரை கணவன் - மனைவி உறவு கூடாது. அவை கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும்.
கணவனுக்கு நோய்தொற்று ஏதேனும் இருந்தால், அது சரியாகும் வரை மனைவி உறவை தவிர்க்க வேண்டும். கணவரும் மனைவியை எவ்வகையிலும் கட்டாயப்படுத்தி உறவு மேற்கொள்ள கூடாது. பிரசவத்திற்கு பின்னர் பெண்ணின் உடல்நலம் சரியானாலும், அவரின் விருப்பம் இன்றி உறவுகொள்ளக்கூடாது. தாம்பத்தியத்தின் போது பெண்ணின் உறுப்பில் கடுமையான எரிச்சல், வலி போன்றவை இருந்தால் உறவை தவிர்ப்பது நல்லது.
குறைமாத பிரசவம் மற்றும் கருச்சிதைவு பிரச்சனைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள், மருத்துவரின் ஆலோசனையை கேட்டு தாம்பத்தியத்தில் ஈடுபடுவது நல்லது. மாதவிடாய் நாட்களில் உறவுகொண்டால் கருத்தரிப்பு நிகழாது என அந்நாட்களில் தாம்பத்தியம் மேற்கொள்ள வேண்டாம். இதனால் கணவன் - மனைவிக்கும் நோய்த்தொற்றுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. பெண் உடல்நலக்குறைவால் நோய்வாய்ப்பட்டு இருந்தால், அந்த நாட்களில் தாம்பத்தியம் கூடாது.