மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
4- ஆம் வகுப்பு சிறுவனுக்கு தெருவில் விளையாடிய போதே விபரீதம்.. துள்ள துடிக்க பறிபோன உயிர்.!
எதிர்பாராத
மரணங்கள் :
சமீப காலமாகவே திடீர் மரணங்கள் தவிர்க்க முடியாததாக மாறிவிட்டது. எந்த காரணத்திற்காக இறந்து போகிறார் என்பது கூட மிக சாதாரணமாக இருக்கிறது. அந்த வகையில், திருவண்ணாமலையில் ஒரு 9 வயது சிறுவன் தேள் கடித்து இறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகிழ்ச்சியான
சிறு குடும்பம் :
திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள மடிப்பாக்கம் எனும் கிராமத்தில் மணிகண்டன் ஏற்ற நபர் கூலி வேலை செய்து தனது குடும்பத்தை காப்பாற்றி வந்துள்ளார். தனது மனைவி மற்றும் 9 வயது மகன் கிஷோர் ஆகியோருடன் மகிழ்ச்சியாக அவர் வாழ்ந்து வந்த போதுதான் இந்த துயர சம்பவம் அரங்கேறியுள்ளது. கிஷோர் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகின்றார்.
அதிர்ச்சியில்
குடும்பத்தினர் :
கடந்த 17ஆம் தேதி தெருவில் கிஷோர் விளையாடிக் கொண்டிருந்தபோது கிஷோரை தேள் கொட்டியுள்ளது. இதைப் பார்த்த குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து உடனடியாக கிஷோரை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர்.
கதறி
துடிக்கும் பெற்றோர் :
அங்கு சிகிச்சை பெற்று நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் சிறுவன் கிஷோர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் பற்றி காவல்துறையினர் தற்போது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விளையாடிக் கொண்டிருந்த சிறு குழந்தை இப்படி தேள் கொட்டி துள்ள துடிக்க உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.