மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"என் மனைவி கர்ப்பமாக இருக்கிறா, அவகிட்ட சொல்லாதீங்க" ரத்த வாந்தி எடுத்து உயிரிழந்த ராணுவ வீரர்.!?
காரைக்கால் மாவட்டம் திருப்பப்பட்டினம் என்ற ஊரில் போலகம் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் வீரன்கொடி தெருவை சேர்ந்த 32 வயது நிரம்பிய பிரேம்குமார், ராணுவ வீரராக இருந்து வருகிறார். இவரது மனைவி செவ்வந்தி தற்போது கர்ப்பமாக இருக்கிறார். மேலும் இவர்களுக்கு 5 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. பிரேம்குமார் இந்திய திபெத் எல்லைப் பகுதியில் 47 ஆவது படைப்பிரிவில் ராணுவ வீரராக பணிபுரிந்து வருகிறார்.
குடும்பத்துடன் ஜம்மு காஷ்மீர் பகுதியில் வசித்து வந்த பிரேம்குமார், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு விடுமுறைக்காக குடும்பத்துடன் காரைக்கால் வந்துள்ளார். மேலும் அவரது மனைவி கர்ப்பமாக இருப்பதால் மனைவி மற்றும் 5 வயது ஆண் குழந்தையையும் ஊரிலேயே விட்டுவிட்டு மீண்டும் ஜம்மு காஷ்மீர் சென்று இந்திய சீனா எல்லைப் பகுதியில் ரோந்து சென்றுள்ளார். அங்கு திடீரென்று அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
மேலும் ரத்த வாந்தி எடுத்த பிரேம்குமார் உடனடி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் தீவிர மருத்துவ சிகிச்சை அளித்தும் பலனளிக்கவில்லை. இவர் உயிர் பிரிந்ததையடுத்து ராணுவ வீரர் பிரேம்குமாரின் உடல் விமானத்தில் சென்னை கொண்டுவரப்பட்டு திருப்பட்டினம் பகுதியில் உள்ள பிரேம்குமார் வீட்டில் கண்ணீர் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
இது போன்ற நிலையில் ராணுவ வீரர் பிரேம்குமார் உயிரிழக்க போவதற்கு முன்பாக கூறிய வார்த்தைகள் அனைவரையும் கண்கலங்க செய்துள்ளது. இது குறித்து அவர் மனைவி செவ்வந்தி கூறியதாவது, "அவர் இறக்கப் போவது முன்கூட்டியே அவருக்கே தெரிந்து உள்ளது. எனவே தான் என் மனைவியிடம் சொல்ல வேண்டாம், கர்ப்பமாக இருக்கிறார் என்று கூறியுள்ளார். இறக்கப் போவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக கூட என்னிடம் பேசினார்" என்று கண்கலங்கியபடி கர்ப்பிணி பெண் செவ்வந்தி பேசியுள்ளார்.