மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தொடரும் அட்டூழியங்கள்...! பள்ளி மாணவியை படுக்கைக்கு அழைத்த இரண்டு ஆசிரியர்கள் கைது
சமீப காலமாக பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நிகழ்ந்தவண்ணமே உள்ளன. அதிலும் குறிப்பாக பள்ளி மாணவிகளை குறிவைத்தே இந்த நிகழ்வு நாள்தோறும் நடந்த வண்ணம் உள்ளது. தமிழகம் மட்டுமின்றி அனைத்து மாநிலங்களிலும் இந்த அட்டூழியங்கள் தொடர்கின்றன. அதிலும் குறிப்பாக வட மாநிலங்களில் மிகவும் மோசமாக இந்த மாதிரியான நிகழ்வு அடிக்கடி நிகழ்ந்துகொண்டிருக்கிறது . அது மாதிரியான சம்பவம் தற்போது அரங்கேறியுள்ளது. இது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது .
மஹாராஷ்டிராவில் உள்ள நாசிக் மாவட்டத்தில் இயங்கி வருகிறது ஒரு தனியார் ஜூனியர் கல்லூரி இயங்கி வருகிறது . இங்கு பணியாற்றி வரும் 2 ஆசியர்கள் பிரவீன் சூர்யவன்ஷி மற்றும் சக்கின் சோனாவனே. இவர்கள் இருவரும், +2 பாடத்தில் தேர்ச்சியடைய வைக்க வேண்டும் என்றால் தங்களிடம் படுக்கையை பகிர வேண்டும் என்று மாணவி ஒருவரை தவறான பாதைக்கு அழைத்துள்ளனர்.
இதனால் பயந்து போன அந்த மாணவி, ஆசியர்களின் நடவடிக்கையை குறித்து பெற்றோரிடம் கூறி கதறி அழுதுள்ளார். பதறிப்போன அவர்கள் போலீசில் புகார் அளித்தனர். புகாரை பதிவு செய்த போலீசார், கல்லூரி ஆசிரியர்கள் பிரவீன் சூர்யவன்சி, சக்கின் சோனாவானே ஆகிய 2 பேரையும் அதிரடியாக கைது செய்தனர். அவர்கள் மீது பாலியல் தொல்லை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.