#LadiesCorner: மார்பக காம்பு வறட்சிக்கான காரணம் என்ன?.. பெண்களே தெரிந்துகொள்ளுங்கள்..!
#LadiesCorner: மார்பக காம்பு வறட்சிக்கான காரணம் என்ன?.. பெண்களே தெரிந்துகொள்ளுங்கள்..!
தாய்மை ஆய்ந்த பெண்கள் தங்களின் குழந்தைகளுக்கு முதல் முறையாக பாலூட்டும் போது மார்பக காம்புகள் மிருதுவுடன் இருக்கும். இதனால் எவ்வித பிரச்னையும் இல்லை. ஆனால், பின்னாட்களில் மார்பக காம்புகளின் மிருது தன்மை குறைந்து வலி எடுக்கும். அப்போது பெண்கள் அனுபவிக்கும் மார்பக காம்பு வலி வார்த்தையால் விவரிக்க இயலாதது.
மார்பக காம்பின் வறட்சி புண் குழந்தைகளுக்கு பாலூட்டுகையில் மேலும் அதிகரிக்கும். இவ்வாறான பிரச்சனைக்கு காரணங்களை தெரிந்துகொண்டால் அதனை குணப்படுத்தலாம். குழந்தைக்கு பாலூட்டும் பெண்கள் குழந்தையை சரியான முறையில் பிடித்து பாலூட்ட வேண்டும். அவ்வாறு பாலூட்டாத பட்சத்தில் மார்பக காம்புகளில் புண்கள் ஏற்படலாம்.
குழந்தையின் வாயானது தாயின் மார்பை சரியான முறையில் கவ்வி பிடிக்காத பட்சத்தில், குழந்தையின் காம்பில் உராய்வு ஏற்பட்டு புண்கள் உருவாகும். சில குழந்தைகள் தாயின் மார்பக காம்புகளை கவ்வி இழுத்து பால் குடிக்கும். இதனாலும் புண்கள் ஏற்படலாம். குழந்தை பிறந்த பின்னர் மார்பகத்தில் பால் சுரப்பு ஏற்படும். இதனால் மார்பக தோல் விரிவடைந்து மார்பு மற்றும் காம்பு பகுதியில் வறட்சி ஏற்படும்.