புதுசா திருமணம் ஆனவரா நீங்கள்?.. திருமண பந்தத்தில் இது ரொம்ப முக்கியம் பாஸ்.. தெளிவா தெரிஞ்சிக்கோங்க.!
புதுசா திருமணம் ஆனவரா நீங்கள்?.. திருமண பந்தத்தில் இது ரொம்ப முக்கியம் பாஸ்.. தெளிவா தெரிஞ்சிக்கோங்க.!
தம்பதிகளில் கணவன் - மனைவியின் உறவை நெருக்கமாகும் விஷயங்களில் தவிர்க்க இயலாதது தாம்பத்தியம். இது சமீபமாகவே குறைந்து வருகிறது என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. கடுமையான வேலை நெருக்கடிகள், மன அழுத்தம், பொருளாதார சிக்கல், சமூக வலைதளத்தின் தாக்கம் போன்று பல்வேறு காரணங்களால் தாம்பத்தியம் பெரும் தடைபடுகிறது. இது, எதிர்காலத்தில் திருமண உறவின் விரிசலுக்கும் வழிவகை செய்வதாக கூறப்படுகிறது. இதனால் திருமணத்திற்கு பின்னர் கூடும் தாம்பத்தியம் அவசியமாகிறது. அன்பை பரிமாறவும், துக்கங்களை பகிரவும் தோழனாக, கணவனாக, அப்பாவாக, அம்மாவாக தேவைப்படும் உறவை சகல விதத்திலும் கொடுத்து இருமனதை சீர் செய்யும் மருந்தே தாம்பத்தியம். இதில் உள்ள ஏற்றத்தாழ்வுகள் அவரவரின் குணத்தை பொறுத்து மாறுகிறது. இதனாலேயே பல பிரச்சனை நடக்கிறது. இதனை தம்பதிகள் புரிந்துகொண்டு செயல்பட்டால் எந்த விரிசலும் இருக்காது.
இன்றளவில் உள்ள இளம் தலைமுறை அதிகளவில் விபரம் புரியாமலேயே காம வலைக்குள் சிக்கி உடல் நலத்தை சீரழிகின்றனர். அது தேவை என்ற போது உடல் ரீதியாக பிரச்னையை சந்தித்து வாழ்க்கையை இழக்கின்றனர். இதில் போதை பழக்கம் வேறு. வாழ்க்கையின் ஈரம் என்ற அன்பை தக்கவைத்து காதல் மழையுடன் காம வெப்பத்தையும் அந்தந்த வயதில் அனுபவிக்க வேண்டும். இல்லாத பட்சத்தில் அதனால் ஏற்படும் உடல்ரீதியான, மன ரீதியான தாக்கத்தை எதிர்கொள்ளவும் தயாராக இருக்க வேண்டும். ஆண் - பெண்ணாய் திருமண பந்தத்திற்கு முன்னர் எதற்காக இவ்வாழ்க்கை என்ற தேடல் இருக்கும். திருமணம் முடிந்ததும் இக்கேள்வி இருக்காது. பல மன உற்சாகம், அரவணைப்பு, சீண்டல், முத்தம், செல்லச்சண்டை, ஆண்மை, பெண்மை போன்றவற்றை உணரவைக்கும் மந்திரம் தான் திருமணமும், தாம்பத்தியமும், தம்பதி புரிதலும்..
தொடத்தொடத் தொடங்கும் காதல் ஹார்மோனை தூண்டிவிட்டு காதலை ஏற்படுத்தி காமத்தில் நிறைவு செய்கிறது. உளவியல் ரீதியாக தனியொருவரின் சுய மதிப்பீட்டை அதிகரித்து, தன்னம்பிக்கையை கொடுக்கும் மந்திரமாக தாம்பத்தியம் விளங்குகிறது. இன்றளவில் ஆண் - பெண் இருவரும் வேலைக்கு செல்கினார்கள். அவர்கள் ஒவ்வொரு இடத்திலும் சந்திக்கும் மன அழுத்தத்தை குறைக்கும் கருவியாக தாம்பத்திய கூடல் இருக்கும். அது இருவரும் விருப்பப்பட்டு மேற்கொண்டால் அதுவே சொர்க்கம். முதல் நாள் உற்சாக தாம்பத்தியம் மறுநாள் வேலையின் உற்சாக மாத்திரம். இதனால் தாம்பத்திய விஷயங்களில் தம்பதிகள் புரிந்துகொண்ட செயல்பட வேண்டும்.
தாம்பத்திய கூடலின் போது தம்பதியின் உடலில் இருந்து அதிகளவு சக்தி செலவழிக்கப்படும். இதனால் மனது அமைதியாகிறது. உடலும் ஆரோக்கியம் பெறுகிறது. உயர் இரத்த அழுத்தம், இதய நோய் போன்றவற்றை குறைக்கும். நோயெதிர்ப்பு சக்தி கிடைக்கும். நல்ல தூக்கம் கிடைக்கும். மேலும், புற்றுநோய்க்கான வாய்ப்பும் குறைகிறது. ஆண் - பெண்ணின் மன அமைதிக்கும், நிம்மதிக்கும் தாம்பத்தியம் பேருதவி புரிகிறது. தாம்பத்தியத்தின் போது இருவருக்கும் ஏற்படும் உச்சகட்டத்தால் உடலில் ஹார்மோன்கள் அனைத்தும் சுரக்கப்பட்டு மனரீதியாக ஏற்பட்டுள்ள பல்வேறு அழுத்தங்கள் குறையும்.