×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

18 Plus: மது + தனிமை இன்பம் எப்படி இருக்கும்? ஒரே யோசனையா? தெரிஞ்சிக்கலாம் வாங்க.! 

18 Plus: மது + தனிமை இன்பம் எப்படி இருக்கும்? ஒரே யோசனையா? தெரிஞ்சிக்கலாம் வாங்க.! 

Advertisement


மதுகுடிப்பதால் உடலுறவில் நன்றாக ஈடுபட முடியும் என்ற மாய நம்பிக்கை மக்களிடம் பரவலாக இருந்து வருகிறது. மதுபானம் செயல்திறனை முதலில் அதிகரிக்கும் என்ற போலி மாயையின் உண்மை சுயரூபம் என்னவென்றால், மது உடலுறவின் மீதான செயல்திறனை மட்டுமல்லாது, அதன் ஆர்வத்தையும் சேர்த்து குறைத்துவிடுகிறது. 

மதுபானம் அருந்தினால் மனத்தடை குறைந்து, என்ன செய்கிறோம் என்பது தெரியாமல் மதியிழந்த சூழல் ஏற்படுகிறது. இதனால் மத்திய நரம்பு மண்டல செயல்பாடுகள் கட்டுப்படுத்தப்பட்டு, மது அருந்தி உடலுறவு மேற்கொள்ளும் போது நேரம் என்பது கண்களுக்கு தெரியாது, அதில் கவனமும் இருக்காது. அதனால் அதிக நேரம் உடலுறவில் ஈடுபட்ட மாய உணர்வு ஏற்படும். இது உண்மையானது கிடையாது. 

முதலுக்கு மோசம் வந்துவிடும்

இதனை தொடர்ந்து செய்தால், பின்னாளில் உடலுறவில் உள்ள ஆர்வம் பூஜ்யமாக குறைந்துவிடும். மதுபானம் குடிப்பதால் கல்லீரல் பாதிக்கப்படுகிறது. ஆணுக்கு உடலுறவுக்கான பாலுணர்வு ஹார்மோன் சுரக்கும் சமயத்தில், கல்லீரல் அதனை பக்குவப்படுத்தி உடலுக்கு அனுப்பி வைக்கிறது. கல்லீரல் பாதிக்கப்படுவதால் ஹார்மோன் சுரப்பு நடந்தாலும், அதன் வேலையை செய்யாமல் இருக்கிறது. இதனால் ஆணின் விறைப்புத்தன்மை பின்னாளில் குறைகிறது. பெண்ணுக்கும் உடலுறவில் ஈடுபாடு குறைகிறது. 

இதையும் படிங்க: உடலுறவு கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் - அசத்தல் தகவல் இங்கே..!

தம்பதியா வாழ்க்கையை சீர்குலைக்கும்

சில மன அழுத்தத்தை குறைக்க பப்பில் ஆடுவதை வழக்கமாக வைத்திருப்பார்கள். மதுபானம் அருந்திவிட்டு ஆடினால் மன அழுத்தம் துளியளவும் குறையாது. இரைச்சலான இசைக்கு ஆடுவது, மன அழுத்தத்தை நேர்மறையாக அதிகரிக்கும். அட்ரினலின் ஹார்மோன் சுரந்து உடல்நலத்தை பாதிக்கும். அளவுக்கு மிஞ்சிய போதையுடன் இரைச்சல் ஒலியில் நடனம் ஆடுவது நாகரீகம் என்று கூறிவிட இயலாது. 

மதுபானம் அருந்துவதால் வாயில் துர்நாற்றம் ஏற்படுகிறது. இதனால் தம்பதிகளின் முத்த பரிமாற்றம் கேட்டு, தனது துணையின் மீது அருவெறுப்பு ஏற்படுத்துகிறது. மதுபானம் தாம்பத்திய வாழ்க்கையை மட்டுமல்லாது, இல்லறத்தையும் பாதிக்கிறது. 

எந்த விதமான மது, மாத்திரை இன்றி உங்களின் துணையை நீங்கள் மகிழ்ச்சியாக வைக்க முயற்சிப்பதும், அதற்கான செயல்களை ஊக்குவிப்பதும் தான் இல்லறத்தில் தம்பதிகளிடம் பிணைப்பை ஏற்படுத்தும். உண்மையான அன்பின் வெளிப்பாடாக இருந்தால், ஒருமுறை இருவரும் உச்சமடைந்தாலே, அதில் அலாதி இன்பம் கிடைத்து திருப்தி உண்டாகும். இல்லையேல் எத்தனை முறை இருந்தாலும், நிம்மதி இருக்காது.

அதேபோல, போதை உல்லாசம் சில நேரம் துணையின் நிலை தெரியாமல் வற்புறுத்தலுக்கு உள்ளாகி, அவரின் உயிரிழப்புக்கும் வழிவகை செய்யும் என்பதால், விபரீதம் தேவையற்றது.

இதையும் படிங்க: உடலுறவு கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் - அசத்தல் தகவல் இங்கே..!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#18 plus #Couple Enjoy #Liquor intercourse #உடலுறவு #போதை உல்லாசம்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story