மெனோபாஸ் தாம்பத்தியத்தை தடையாக்குகிறதா?.. உற்சாக செய்தி., அப்புறம் என்ன ஒரே ஜமாய்த்தான்..!
மெனோபாஸ் தாம்பத்தியத்தை தடையாக்குகிறதா?.. உற்சாக செய்தி., அப்புறம் என்ன ஒரே ஜமாய்த்தான்..!
வாழ்க்கையின் இறுதித்துளி வரையில் உடலுடன் மனதுடன் ஒருசேர வருவது உணர்வு. இது ஆண் - பெண் இணைப்பை பலப்படுத்தும் அபூர்வ சக்தி கொண்டது. காலம்காலமாக தம்பதிகள் தங்களுக்குள் உற்சாகமாக இருக்க விரும்பி, தங்களின் உணர்வுகளை மனரீதியாகவும் - உடல் ரீதியாகவும் வெளிப்படுத்தி உற்சாகத்துடன் இருந்து மனதில் இருக்கும் அழுத்தங்களை குறைப்பது ஆகும். திருமணத்தை தொடர்ந்து இருபாலரும் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் இணைந்து தம்பதிகள் உற்சாகமாக இருந்தாலும் பெண்களுக்கு வயது கூடக்கூட மெனோபாலஸ் என்ற மாதவிடாய் சுழற்சி நிற்கும் பருவம் எட்டிப்பார்க்கும்.
பெண்கள் என்றுமே ரொமான்டிக்கான நபர்கள். ஊடல் கூடல் விஷயங்களில் சின்னசின்ன தருணங்களையும் ரசனையுடன் செயல்படுத்தி உற்சாகமாக இருப்பவர்கள். சின்னச்சின்ன செல்ல கோபம், செல்ல சீண்ட போன்றவற்றை அலாதியாக கொண்டு செயல்படுபவர்கள். ஆனால், இதுபோன்று தங்களுக்கு விரும்பியதை வெளிப்படையாக பெரும்பாலும் சொல்வது கிடையாது. கணவனின் செல்லகுறும்புகளுக்கு ஏற்றாற்போல விலகிவந்து சென்று செல்லும் தருணங்கள் அழகானவை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு குணம், மனம்.. அதனைப்போல அனைத்தும் அமையும்.
Pre - Menopause காலத்தில் மனம் அடையும் மாற்றம், ஹார்மோன் மாற்றம், உடல்-மன துன்பங்கள் போன்றவை கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். இதன்போது, கணவராக மனைவியின் உடல்நலம், மனம் அறிந்து செயல்பா வேண்டும். திருமணம் முடிந்த புதிதில் தம்பதியாய் எப்படி தனிமையில் வாழ்க்கையை இன்பத்துடன் தொடங்கினார்களோ, அதே தருணங்கள் மாதவிடாய் முடியும் காலகட்டத்திலும் அவசியம். உடல் ஒத்துழைக்காமல் தாம்பத்திய இன்பம் கூடவில்லை என்றாலும், மனரீதியாக இருவரும் அருகருகே தங்களின் உணர்வுகளை முத்தமாக, செல்ல பேச்சுகளாக பரிமாறி மகிழலாம்.
மெனோபாஸ் என்பது பெண்ணின் வாழ்க்கையில் முக்கியமான ஒன்றாகும். மெனோபாஸ் காலத்தில் தொடர்ந்து 12 மாதவிடாய் வராமல் இருக்கும் பட்சத்தில் பெண் மெனோபாஸ் அடைந்துவிட்டாள் என்று அர்த்தம். இது பெண்களுக்கு சராசரியாக 45 வயது முதல் 52 வயது வரை நிகழலாம். அன்பு, அரவணைப்பு, தோழனாக கணவர் இருக்கும் பட்சத்தில் மாதவிடாய் நிற்கும் தருணம் இன்பத்துடன் தான் இருக்கும். பருவ வயதில் பெண்ணின் உடலில் இருந்து உற்பத்தியாகி வெளியேறும் கருமுட்டை தனது வாழ்நாள் பயனை முடித்துக்கொண்டு பெண்ணின் உடலில் மறைந்துவிடுகிறது.
இந்தியாவை பொறுத்தமட்டில் பெண்களுக்கு அதிக உடல் வெப்பம், எலும்பு தேய்மானம், அதிகளவில் வியர்வை வெளியேறுவது, மன அழுத்தம், தூக்கமின்மை, பிறப்புறுப்பு வறட்சி, சிறுநீர் அடக்க இயலாதது, தோல் மாற்றம், இதயக்கோளாறு போன்றவை அதிகளவு ஏற்படுகிறது. பிறப்புறுப்பில் ஏற்படும் வறட்சி காரணமாக தாம்பத்தியத்தில் புணர்ச்சியின் போது வலி ஏற்படலாம். பெண்களுக்கு ஊட்டச்சத்து என்பது மிகவும் அவசியம். பெண்களின் உடல்நலனை கவனிக்க சத்துள்ள ஆகாரங்களை எடுத்துக்கொள்ள வேண்டும்.
தினமும் அதிகாலையில் எழுவது, குளிர்ந்த நீரில் குளிப்பது, நேரத்திற்கு உணவு எடுத்துக்கொள்வது, இரவில் நன்றாக உறங்குவது போன்றவை அவசியம். அதனைப்போல ரசாயனம் கலந்த துரித உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும். இயற்கை உணவுகளை அதிகளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். எந்த சூழ்நிலையிலும் மெனோபாஸ் தாம்பத்தியத்திற்கு தடையாகாது. நமது மன உற்சாகம் அனைத்துக்கும் வழிவகை செய்து கொடுக்கும். மனமிருந்தால் மார்க்கம் உண்டு.