ஆபாச படங்கள் குறித்து பெண்களின் எண்ணம் என்ன?; உண்மையை தெரிந்துகொள்ளுங்கள் தம்பதிகளே.!
ஆபாச படங்கள் குறித்து பெண்களின் எண்ணம் என்ன?; உண்மையை தெரிந்துகொள்ளுங்கள் தம்பதிகளே.!
பெரும்பாலான ஆண்கள் எப்போதும் காட்சித்தூண்டல் தொடர்பான விஷயங்களுக்கு ஆட்படுபவர்கள். அவர்களின் மனதில் உள்ள எதிர்பார்ப்பு, நண்பர்களுடன் கூடிப்பேசி மகிழ்ந்த விஷயங்கள் என அவர்களின் சூழ்நிலை மாற்றிவிட்டது.
பாலியல் விஷயத்தில் பெண்கள் முந்தைய காலங்களில் ஆர்வம் குறைவாக காண்பித்தாலும், தற்போதுள்ள காலகட்டத்தில் இருபாலரும் ஆர்வத்தை ஒருங்கே காண்பிக்கின்றனர்.
இயல்பாக பாலியல் தூண்டல் என்பது மாறுபடக்கூடிய, நரம்பியல் செயல்முறை ஆகும். இவை காட்சிதூண்டலால் ஏற்படுகிறது. ஜெர்மனியை சேர்ந்த மேக்ஸ் பிளாங்க் இன்ஸ்டிடியூட் பயாலஜிக்கல் சைபர்நெட்டிக்ஸ் நிறுவனத்தின் ஆராய்ச்சிக்குழு இதுகுறித்த ஆய்வுகளை மேற்கொண்டு வந்துள்ளது.
ஆய்வின் முடிவில், ஆண்-பெண் இருபாலரும், காட்சிதூண்டலுக்கு உள்ளாக்குவது தெரியவந்துள்ளது. இருவரின் மூளையும் ஆபாச காட்சிகளுக்கு ஒரேமாதிரி செயல்பட்டுள்ளது.
சோதனைக்கு தயாராக இருந்தவர்களிடம் வெவ்வேறு முறையில் பாலியல் படங்கள் காண்பிக்கப்படும் நிலையில், அவர்களின் மூளை தூண்டப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
முந்தைய ஆய்வுகளில் ஆண்கள் அதிக காட்சிதூண்டலுக்கு உள்ளாகியிருப்பது உறுதியான நிலையில், தற்போது அத்தாக்கம் பெண்களிடமும் ஏற்பட்டுள்ளது.
ஒருசில பெண்கள் ஆபாச படங்கள் ஒளிபரப்பு செய்யப்படும்போது, எவ்வித காட்சிதூண்டலுக்கும் 0% கூட உள்ளாக்கவில்லை. அவர்கள் அவ்வாறான காட்சியை விரும்பவும் இல்லை. இதனால் ஆண்கள்-பெண்களிடையே இவ்வாறான விஷயங்களில் வேறுபாடு இல்லாமல், கிட்டத்தட்ட ஒரே முடிவுகள் வந்துள்ளன.
நவீனமயமாகும் உலகில் பெண்களின் கல்வி மற்றும் பொருளாதார நிலை, தொழில்நுட்ப வளர்ச்சி போன்றவை பல மாற்றங்களை பெண்களிடையே தற்போது ஏற்படுத்த தொடங்கியுள்ளது உறுதியாகியுள்ளது.