×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சிசிடிவி காட்சி: ராஜா ராணி பட ஸ்டைலில் விபத்தில் பலியான காதலி!

hyderabad girl dead in road accident

Advertisement

ஹைதராபாத்தில் வருங்கால கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் சாலை விபத்தில் பலியானார். அந்த விபத்தானது  சாலை ஓரத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

ஹைதராபாத் கூகுள் நிறுவனத்தில் பணியாற்றி வந்தவர் வினிஷா. இவருக்கு வயது 24. இவர் SR நகரில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கி இருந்தார். இவர் கிரண் குமார் (30) என்பவரை பல நாட்களாக காதலித்து வந்துள்ளார். இவர்களின் திருமணத்திற்கு இரண்டு வீரர்களும் சம்மதிக்கவே சில நாட்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது.

இந்நிலையில் சனிக்கிழமை இருவரும் இருசக்கர வாகனத்தில் கோவிலுக்கு சென்றுள்ளனர். உப்பால் பகுதியில் இவர்கள் சென்று கொண்டிருந்த பொழுது சாலையின் குறுக்கே இருந்த தடுப்புச்சுவரில் இருசக்கர வாகனம் மோதியது. பின்னால் அமர்ந்திருந்த வினிஷா கீழே விழுந்தார். அப்போது பின்னால் வேகமாக வந்த காரில் அடித்து இழுத்துச் செல்லப்பட்ட வினிஷா  சிறிய தூரம் இழுத்துச் செல்லப்பட்டு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார். இந்த விபத்தில் காயமடைந்த கிரண்குமார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

வண்டியை ஓட்டி வந்த கிரண்குமார் முன்னாள் விழுந்து தன்னுடைய காதலி தன் கண்முன்னே இழுத்துச் செல்லப்படும்  காட்சியை பார்க்கும் சம்பவம் நம் எல்லோர் மனதையும் கவலையில் ஆழ்த்துகிறது. 

இந்த சம்பவத்தை பற்றி வழக்கு தொடர்ந்த காவல்துறையினர் "இவர்களுக்கு முன்னால் சென்ற வாகனம் சாலையின் குறுக்கே இருந்த தடுப்புச்சுவரை மறைத்துக் கொண்டு சென்றுள்ளது. தடுப்புச்சுவர் வந்தவுடன் அந்த கார் ஒதுங்கி செல்லவே கிரண் குமாரால் இருசக்கர வாகனத்தை உடனே நிறுத்த முடியவில்லை. எனவே அவருடைய வாகனம் தடுப்புச்சுவரில் பலமாக மோதியது. இதனால் தான் இந்த விபத்து நடந்துள்ளது" என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#hyderabad girl dead in road accident #vinisha #kiran kumar #google employee dead in road accident
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story