காதலனுடன் ஓட்டம் பிடித்த அமைச்சர் சேகர்பாபு மகள் 8 மாத கர்ப்பம்.. அப்பாவால் ஆபத்து - பகீர் வீடியோ வெளியீடு.!
காதலனுடன் ஓட்டம் பிடித்த அமைச்சர் சேகர்பாபு மகள் 8 மாத கர்ப்பம்.. அப்பாவால் ஆபத்து - பகீர் வீடியோ வெளியீடு.!
கடந்த 10 மாதங்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியேறி திருமணம் செய்த அமைச்சரின் மகள், தான் கர்ப்பமாக இருப்பதாக கூறி பாதுகாப்பு கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பொறுப்பில் இருப்பவர் சேகர் பாபு. இவரின் மகள் ஜெயகல்யாணி. இவரின் வீட்டருகே வசித்து வந்தவர் சதீஷ். இவர் திமுக மாணவரணி பொறுப்பில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இருந்துள்ளார். இந்த நிலையில், அமைச்சர் சேகர் பாபுவின் மகள் ஜெயகல்யாணிக்கும் - சதீஷுக்கும் இடையே ஏற்பட்ட பழக்கமானது பின்னாளில் காதலாக மாறவே, இருவரும் கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.
இவர்களின் காதல் விவகாரம் அமைச்சர் சேகர்பாபுவின் தரப்புக்கு தெரியவந்ததால் ஜெயகல்யாணியை அமெரிக்காவுக்கு முதலில் அனுப்பி வாய்த்த நிலையில், அங்கிருந்து தாயகம் வந்தவர் காதலனை கரம்பிடித்து தற்போது வரை தலைமறைவு வாழ்க்கையில் இருக்கிறார். இதற்கிடையில், தற்போது 8 மாத கர்ப்பிணி பெண்ணாக இருக்கும் ஜெயகல்யாணி அதிர்ச்சி வீடியோ வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், "நான் எனது முழு விருப்பத்துடன் வெளியே வந்து காதலனை கரம்பிடித்தபோது, எங்களை புனேவில் கண்டறிந்து எங்களை பிரித்து இருந்தனர். பின்னர், சதீஷின் தந்தை ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்ததால் 2 மாதம் கழித்து கணவரை கண்ணில் காண்பித்தனர். எனது கணவரின் முன்னாள் காதலிக்கு திருமணம் ஆகி குழந்தை இருக்கும் நிலையில், எனது அப்பாவின் ஆதரவாளர்கள் அப்பெண்ணை வைத்து எனது கணவருக்கு எதிராக புகாரளிக்க வைக்கின்றனர்.
எனது கணவரை ஏதேனும் செய்துவிடுவார்கள் என்ற பயத்தில் நாங்கள் தலைமறைவாக இருக்கிறோம். நாங்கள் பதிவு திருமணமும் செய்துகொண்டுள்ளோம். எனது கணவரின் மீது பல்வேறு குற்றவழக்குகளை போலியாக பதிவு செய்துள்ளார்கள். எனது கணவரின் தந்தை மாற்றுத்திறனாளியாக இருக்கும் நிலையில், அவரின் மீதும் வழக்குப்பதிவு செய்தார்கள். நாங்கள் நீதிமன்றம் சென்று வாதாடி வெற்றிபெற்றோம். நாங்கள் சென்னை வந்தால் உயிர்க்கு ஆபத்து என்பதால், சென்னையில் நீதிமன்றத்திற்கு வரக்கூட பயமாக உள்ளது. எனது கணவரை நீதிமன்றத்தில் சரணடைய வைத்தால் லாக்கப் டெத் செய்துவிடுவார்களோ என பயமாக உள்ளது. தமிழகத்தில் லாக்கப் டெத் அதிகரித்துவிட்டது.
ஒருவேளை எங்களுக்குஒ, எனது குழந்தைக்கோ, கணவருக்கோ ஆபத்து ஏற்பட்டால் அதற்கு முழு பொறுப்பு அப்பா அமைச்சர் சேகர்பாபு, காவலர்கள் ஜானி செல்லப்பா, கிருஷ்ணமூர்த்தி, தாய்மாமா யுவராஜ் ஆகியோர்கள் முழுக்க பொறுப்பு. நாங்கள் நீதிமன்றம் வந்து வழக்கை சந்திக்க தயாராக இருக்கிறோம். கடந்த 10 மாதத்தில் 3 போலி புகார்கள் எனது கணவரின் மீது பதிவு செய்துள்ளனர். தமிழ்நாட்டில் அப்பா முதல்வருடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதால் காவல் துறையினர் அவர்களுக்கே சாதகமாக இருக்கிறார்கள்.
முதல்வருக்கு விஷயம் தெரியுமா? தெரிந்தும் கண்டுகொள்ளாமல் இருக்கிறாரா? என தெரியவில்லை. நாங்கள் பல இடங்களுக்கு சென்று உதவி கேட்டாலும், எங்களுக்கு உதவி செய்ய பலரும் மறுக்கிறார்கள். எங்களை காப்பாற்ற வேண்டும். எங்களுக்கு உதவி செய்யுங்கள்" என்று தெரிவித்தார்.
பொறுப்புத்துறப்பு: மேற்கூறிய செய்தி சமூக வலைத்தளத்தில் வெளியாகி கல்யாணி அவர்கள் கூறிய பதிவுகளின் அடிப்படையில் பதிவிடப்பட்டுள்ளது. காணொளியும் உட்பொதியப்பட்டுள்ளது.