ஆசிய கோப்பை: 200 ஆவது ஆட்டத்தை வெல்ல முடியாத தோனி; எப்படி சமாளிக்கிறார் பாருங்கள்!!
dhoni reacts after 200th match tie
ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றின் நேற்றைய ஆட்டத்தில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்த தொடரில் இதுவரை தோல்வியே சந்திக்காத இந்திய அணி இறுதிப்போட்டிக்கு ஏற்கனவே தகுதிபெற்று விட்டது. இறுதி போட்டிக்கு தகுதிபெறும் வாய்ப்பை இழந்தாலும் இந்த தொடரில் எதிரணிகளை கலங்கடித்த ஆப்கானிஸ்தான் இந்தியாவை கதிகலங்க வைத்தது.
இந்த ஆட்டத்தில் கேப்டன் மற்றும் தொடக்க ஆட்டகாரரான ரோஹித் ஷர்மாவிற்கு ஓய்வளிக்கப்பட்டதால் இந்திய அணிக்கு தோனி மீண்டும் கேப்டனானார். இது கேப்டனாக தோனி களமிறங்கும் 200-வது ஆட்டமாகும்.
இந்த ஆட்டத்தின் துவக்கத்தில் இருந்தே ஆப்கானிஸ்தான் அணியின் துவக்க ஆட்டக்காரர் ஷாசாத் இந்திய பந்துவீச்சாளர்களை அடித்து நொறுக்க ஆரம்பித்தார். 7 சிக்ஸர்கள் மற்றும் 11 பவுண்டரிகளை விளாசிய ஷாசாத் 116 பந்துகளில் 127 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் 253 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சிறப்பான இலக்கை இந்திய அணிக்கு நிர்ணயித்தது ஆப்கானிஸ்தான்.
ஆனால் இந்த ஆட்டத்தில் கடைசி வரை போராடிய இந்திய ஆனால் வெற்றிபெற முடியவில்லை. ஆட்டம் டையில் முடிந்தது.
இந்த ஆட்டத்தின் முடிவில் பேசிய கேப்டன் தோனி, "இந்தியாவின் முக்கிய வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டதால் இன்றிய ஆட்டத்தில் இந்திய அணி முழு பலத்துடன் களமிறங்கவில்லை. கேப்டனாக இந்த 200 ஆவது ஆட்டத்தை வெல்ல வேண்டும் என்ற ஆசை எனக்கு இருந்தது. இருப்பினும் ஷாசாத்தின் சிறப்பான ஆட்டத்திற்கு பிறகு அவர்களை வென்று ஆப்கானிஸ்தான் மக்களின் மனதை புண்படுத்த எங்களுக்கு விருப்பமில்லை. எனவே நாங்கள் இந்த ஆட்டத்தை சமன் செய்துவிடலாம் என்று முடிவு செய்துவிட்டோம். அதனால் தான் கடைசி பந்தில் ஜடேஜா வேண்டுமென்றே அவுட்டாகினர்" என்று தோனி கிண்டலாக பதிலளித்தார்.