ஆப்கானிஸ்தானை போராடி வென்ற பாக்கிஸ்தான் கொண்டாட்டம்; ட்விட்டரில் கலாய்த்த ரவிந்திர ஜடேஜா!!
jadeja teased pakistan victory over afkanistan
நேற்று துபாயில் நடந்த ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் அணி ஆப்கானிஸ்தானை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 257 ரன்கள் எடுத்திருந்தது. பின்னர் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு கடைசி ஓவரில் அந்த இலக்கை எட்டிப் பிடித்தது.
அந்த அணியின் சோயிப் மாலிக் கடைசிவரை நிலைத்து நின்று போராடி பாகிஸ்தானிற்கு இந்த வெற்றியை தேடித்தந்தார். கடைசி ஓவர் வரை பரபரப்பாக இருந்த இந்த ஆட்டத்தில் வெற்றிபெற்றதன் மூலம் பாகிஸ்தான் ரசிகர்களும் வீரர்களும் மிகுந்த உற்சாகத்தில் இருந்தனர்.
இவர்களின் இந்த கொண்டாட்டத்தை கலாய்க்கும் விதமாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா "ஆப்கானிஸ்தானை வென்றதை ஏதோ உலகக்கோப்பையை வென்றது போல் கொண்டாடுகின்றது பாகிஸ்தான். இதனைப் பார்க்கும்போது 2005 ஆம் ஆண்டில் வங்கதேசம் அணி ஆஸ்திரேலியாவை வென்றபோது கொண்டாடியது தான் எனக்கு நினைவிற்கு வருகிறது" என்று பதிவிட்டுள்ளார்.