பிக் பாஸ் சீசன் 7 இந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறப் போவது யார்.?
பிக் பாஸ் சீசன் 7 இந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறப் போவது யார்.?
விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த அக்டோபர் மாதம் 1ம் தேதி 18 போட்டியாளர்களுடன் ஆரம்பமான இந்த நிகழ்ச்சி, 50 நாட்களை கடந்து ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இதுவரையில், ஒளிபரப்பப்பட்ட எந்த ஒரு சீசனிலும் செய்யப்படாத பல்வேறு மாற்றங்கள் இந்த சீசனில் செய்யப்பட்டுள்ளது.
தற்போது கடுமையான 3 போட்டிகள் இந்த வீட்டிலுள்ள போட்டியாளர்களுக்கு வைக்கப்பட்டு, அதில் தோல்வியடைந்தால், இந்த வீட்டிலிருந்து 3 பேர் வெளியேற வேண்டும் என சொல்லப்பட்டுள்ளது. அதோடு இதற்கு முன்னர் இந்த வீட்டிலிருந்து, வெளியேறிய 3 போட்டியாளர்கள் மறுபடியும் இந்த வீட்டிற்குள் நுழைவார்கள் என்று பிக்பாஸ் தெரிவித்திருக்கிறார். இதன் காரணமாக, தற்போது இந்த நிகழ்ச்சி உச்சக்கட்டத்தை ஏட்டியிருக்கிறது.
Poorniஅதோடு நடப்பு வாரத்தில் குறைவான வாக்குகளை பெற்று கடைசி இடத்திலிருப்பது பூர்ணிமா மற்றும் மாயா தான் என்று கூறப்படுகிறது. ஆனாலும் எலிமினேஷன் ப்ராசஸ் நடக்கும்போது இந்த நிகழ்ச்சியிலிருந்து அக்ஷயா வெளியேறியிருப்பதாக சொல்லப்படுகிறது. இதே போல பூர்ணிமா வெளியேற வாய்ப்பிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.