காதலருடன் ஓட்டம் பிடித்த 16 வயது மகள்: திரைப்பிரபல தம்பதிகள் தற்கொலை.!
காதலருடன் ஓட்டம் பிடித்த 16 வயது மகள்: திரைப்பிரபலமான தம்பதிகள் தற்கொலை.!
கர்நாடக மாநிலத்தை சேர்ந்த திரைத்துறை பிரபலங்கள் லீலாதர் செட்டி (வயது 68). வசுந்தரா செட்டி (வயது 59). இவர்கள் கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு சிறுமி ஒருவரை தத்தெடுத்து தங்களது மகளாக அன்பு காட்டி வளர்த்து வந்தனர்.
இந்நிலையில் இவர்களின் வீட்டில் வேலை பார்த்து வந்த நபர், அவரது 16 வயது மகளை காதல் வலையில் வீழ்த்தி தன்னுடன் அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த தம்பதி தற்கொலை செய்து உயிரை மாய்த்துள்ளனர்.
இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தம்பதிகளின் தற்கொலை குறித்து தகவலறிந்த காவல்துறையினர் இருவரின் உடலை மருத்துவனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.