விவசாய கடன் தள்ளுபடி: ரிசர்வ் வங்கி எச்சரிக்கை.!
farmers loan discound - indian reserv bank
மாநில அரசுகள் விவசாய கடன்களை தள்ளுபடி செய்வது குறித்து முடிவு எடுக்கும் முன் நாட்டிலுள்ள நிதி ஆதாரத்தை கணக்கில் கொள்ள வேண்டும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
நிதி விவகாரத்தில் மாநில அரசுகள் தலையிட அரசியல் சட்டத்தில் இடம் உள்ளது. அந்த வகையில் சமீபத்தில் மூன்று மாநிலங்களில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அரசு மாநிலங்களில் விவசாய கடன்களை தள்ளுபடி செய்துள்ளது. அவ்வாறு தள்ளுபடி செய்யும் போது நாட்டில் நாட்டிலுள்ள நிதி ஆதாரத்தை ஆராய வேண்டும் என்று ஆர்பிஐ ஆளுநர் தெரிவித்துள்ளார்.
மாநில அரசுகள் விவசாய கடன்களை தள்ளுபடி செய்யும் முன் அதற்கான நிதியாதாரத்தை வங்கிகளுக்கு ஒதுக்க முடியுமா என்று முன்கூட்டியே ஆராய வேண்டும். இல்லையெனில் வங்கிக்கடன் கலாச்சாரம் மற்றும் கடன் வழங்குவோரின் எதிர்கால செயல்பாடுகள் எதிர்மறையாக அமைய வாய்ப்பிருக்கிறது.
தற்போது ரிசர்வ் வங்கி நாட்டிலுள்ள பணப்புழக்கத்தை ஆராய்ந்து வருகிறது. அதில் ஏதும் பிரச்சினைகள் எழும் பட்சத்தில் தனது செயல்பாட்டினை துவங்கும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் விளக்கம் அளித்துள்ளார்.