பிரபல வங்கியை முடக்கிய RBI! பணத்தை எடுக்க முடியாததால் வாடிக்கையாளர்கள் கதறல்
Pirabala vankiyai mudakiya RBI
பஞ்சாப் மற்றும் மும்பை கூட்டுறவு வங்கி நாட்டின் சிறந்த 10 கூட்டுறவு வங்கிகளில் ஒன்றாக உள்ளது. அடுத்த 6 மாதங்களுக்கு இந்த வங்கியின் அன்றாடச் செயல்பாடுகள் அனைத்திலும் மிகக் கடுமையான கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி விதித்துள்ளது.
ரிசர்வ் வங்கியின் தலைமைப் பொது மேலாளார் யோகேஷ் தயாள் இது பற்றி கூறும்போது, "இந்த வங்கியில் சேமிப்புக் கணக்கு, நடப்புக் கணக்கு அல்லது பிற டெபாசிட் கணக்குகளை வைத்துள்ள வாடிக்கையாளர்கள் அனைவரும் அடுத்த 6 மாதங்களுக்கு தங்கள் கணக்கிலிருந்து 1000 ரூபாய்க்கு மேல் பணம் எடுக்க முடியாது." எனத் தெரிவித்தார்.
1984ஆம் ஆண்டு மும்பையில் தொடங்கப்பட்ட இந்த வங்கி மகாராஷ்டிரா, டெல்லி, கர்னாடகா, கோவா, குஜராத், ஆந்திரப் பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய ஆறு மாநிலங்களில் 137 கிளைகளைக் கொண்டிருக்கிறது.
மேலும் RBI பிறப்பித்துள்ள இந்த கடுமையான உத்தரவு பற்றிக் கூறிய பிஎம்சி வங்கியின் மேலாண்மை இயக்குநர் ஜாய் தாமஸ், RBIக்கு வழங்கப்பட்ட தகவல்களில் தவறு உள்ளதாகக் கூறி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். வங்கியின் மேலாண்மை இயக்குநர் என்ற முறையில் இந்த தவறுகள் 6 மாதங்களில் சரிசெய்யப்பட்டுவிடும் என்பதற்கு பொறுப்பேற்கிறேன் எனவும் அவர் உறுதி அளித்துள்ளார்.
இருப்பினும் தங்களது பணம் திரும்ப கிடைக்குமா கிடைக்காத என்ற அச்சத்தில் மக்கள் வங்கி வாசலில் கூச்சலிட்டு வருகின்றனர்.