X'mas: நள்ளிரவில் இயேசு கிறிஸ்துவின் ஆசீர் பெற குவிந்த மக்கள்!
Christmas celebration in Arputhapuram
கிறிஸ்மஸ் என்றாலே சிறுவர்களுக்குக் கொண்டாட்டம்தான்! கிறிஸ்மஸ் தாத்தா என கூறி, பெற்றோரே இரகசியமாகக் கொண்டு வைக்கும் பரிசுகளைப் பிரிப்பதில் குழந்தைகளுக்கு எவ்வளவு ஆனந்தம் ! வாலிபர்களுக்குத் தங்கள் நண்பர்களோடு சுற்றுவது மகிழ்ச்சி! கிறிஸ்மஸ் என்பது கிறிஸ்து நம்மிடம் பிறந்து, நம்மோடு என்றும் வாழ்வது தான்.
உலகம் முழுவதும் இன்று டிசம்பர் 25 ஆம் தேதி நள்ளிரவில் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
தஞ்சாவூர் மறைமாவட்டம், திருக்கானூர்பட்டி பங்கைச் சேர்ந்த அற்புதபுரம் கிராமத்தில் அனைத்து மக்களும், அங்குள்ள புனித அற்புத அன்னை ஆலயத்தில் இரவு 11 மணிக்கெல்லாம் கூடினர். அருட்தந்தை S. அகிலன் (vice Provincial, SDB, Trichy) அவர்கள் தலைமையில் கிறிஸ்துமஸ் நள்ளிரவு திருப்பலி 11:30 மணிக்கு துவங்கியது.
அற்புதபுரம் கிராம மக்கள் மிகவும் பக்தியுடன் திருப்பலியில் கலந்துகொண்டனர். அந்த கிராமத்தை சேர்ந்த இணைந்த இளைஞர் மன்றத்தினரால் ஆலயத்தில் அழகான் குடில் உருவாக்கப்பட்டது. சரியாக நள்ளிரவு 12 மணியளவில் இயேசு கிறிஸ்து அந்த குடிலில் பிறந்து மக்களுக்கு ஆசீர் வழங்கினார். மக்களும் குழந்தை இயேசுவிடம் தங்கள் வேண்டுதல்களை முன்வைத்தனர்.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை புத்தாடைகளை அணிந்து கிறிஸ்துமஸ் பண்டிகையை மிகவும் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். நள்ளிரவு திருப்பலி முடிந்ததும் மக்கள் ஒவ்வொருவரும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.