×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

யார் இந்த கிறிஸ்துமஸ் தாத்தா? அவர் உருவானதன் பின்னணி என்ன தெரியுமா?

Christmas santa claus history

Advertisement

இயேசு கிறிஸ்துவின் பிறந்த தினம்தான் கிறிஸ்துமஸ் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இயேசு பிறந்த நாளை உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் என கொண்டாடுகிறோம். கிறிஸ்துமஸ் என்றவுடன் முதலில் நினைவுக்கு வருவது கிறிஸ்துமஸ் தாத்தா எனப்படும் சாண்டா கிளாஸ்தான். 

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவர்க்கும் இனிப்பு, பரிசு என கொடுத்து அனைவரையும் மகிழ்விப்பவர் இந்த கிறித்துமஸ் தாத்தா. இனிப்புகளை குழந்தைகளுக்கு அள்ளி தந்து அவர்களை உற்சாகப்படுத்துவார். எந்த குழந்தையும் அவரிடம் ஏமாந்ததில்லை. இந்த தாத்தா எப்படி உருவானார் என்பது உங்களுக்கு தெரியுமா.

முதன்முதலில் கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்தவர் செயிண்ட் நிக்கோலஸ். இவர் பிறந்தது தென் துருக்கியில் இருக்கும் லிசியாவில் தான். மேலும் இவர் 4ம் நூற்றாண்டை சேர்ந்தவர், அதுமட்டும் இல்லாமல் நிக்கோலஸ் பிஷப் பதவியில் இருந்தவர்.

டிசம்பர் 6ம் தேதி இரவே வந்து கிறிஸ்துமஸ் தாத்தா பரிசுகளை கொடுப்பார். பழங்கள் சாக்லெட்கள், சிறு பொம்மைகள், சிறு பொருட்களை பரிசாக கொடுப்பார்.

16ம் நூற்றாண்டில் சிலுவை போர் நடந்த போது செயின்ட் நிக்கோலஸ் ஐரோப்பாவிலிருந்து வெளியேற்றப்பட்டார். டச்சுக்காரர்கள் மட்டும் செயிண்ட் நிக்கோலஸ் பழக்கங்களை பின்பற்றினர். அமெரிக்காதான் சாண்டா கிளாஸை பிரபலப்படுத்தியது.

சாண்டா கிளாஸ் குண்டானவராக, வெள்ளை தாடியுடன், தொந்தி விழுந்த வயிறுடன், பல வண்ண உடையணிந்து வேடிக்கையானவராக சித்தரிக்கப்பட்டார். உண்மையில் ஏழைகள், இல்லாதவர்களுக்கு உதவும் பொருட்டே கிறிஸ்துமஸ் தாத்தா அவதரித்தார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Christmas #Christmas in india #Sanda #santa claus
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story