வாவ்.. லட்சுமி ராமகிருஷ்ணனா இது! 15 வருஷத்துக்கு முன்னாடி எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா! வாயடைத்துப்போன ரசிகர்கள்!
நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் 15 வருடத்திற்கு முன்பு சினிமாவிற்கு வரும்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

கடந்த 2006 ஆம் ஆண்டு மலையாள படத்தின் மூலம் சினிமாதுறையில் அறிமுகமானார் லட்சுமி ராமகிருஷ்ணன். அதன்பிறகு 2008 ஆம் ஆண்டு பிரிவோம் சந்திப்போம் என்ற படத்தில் சினேகாவுக்கு அம்மாவாக நடித்ததன் மூலம் அவர் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். மேலும் தற்போது லட்சுமி ராமகிருஷ்ணன் நடிகை, இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகத்திறமை கொண்டு விளங்கி வருகிறார்.
இவர் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார். இந்த நிகழ்ச்சியில் இவர் பல சங்கடங்களை, சிக்கல்களை, கிண்டல்களை சந்தித்திருந்தாலும் ஏராளமானோர் இதனால் பயனடைந்துள்ளனர் என கூறப்படுகிறது. அதனைத்தொடர்ந்து நான் வீழ்வேன்று என்று நினைத்தோயா என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் தற்போது நேர்கொண்ட பார்வை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்பொழுது ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வப்போது சமூக அநீதிகள், மற்றும் பெண்களுக்கு ஆதரவாக கருத்துக்களை பதிவிட்டு வருவார். இந்நிலையில் லட்சுமி ராமகிருஷ்ணன் தற்போது 15 வருடத்திற்கு முன்பு சினிமாவிற்கு வரும்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார்.
அதனை கண்ட ரசிகர்கள் அட, லட்சுமி ராமகிருஷ்ணனா இது! என ஆச்சரியத்தில் உள்ளனர்.