நடிகை மும்தாஜ் வீட்டில் கொடுமை தாங்கமுடியல.! போலீசாருக்கு வந்த போன்கால்! நடந்த ஷாக் சம்பவம்!!
நடிகை மும்தாஜ் வீட்டில் கொடுமை தாங்கமுடியல.! போலீசாருக்கு வந்த போன்கால்! நடந்த ஷாக் சம்பவம்!!
தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் பிரபல நடிகையாக, கவர்ச்சி குயினாக வலம் வந்தவர் மும்தாஜ். இவர் தமிழில் டி.ராஜேந்தரின் மோனிஷா என் மோனலிசா என்ற படத்தில் நடித்ததன் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து அவர் குஷி, ஸ்டார், ரோஜாக்கூட்டம், ராஜாதி ராஜா, ஏழுமலை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழி படங்களிலும் நடித்துள்ளார். பின்னர் நாளடைவில் அவருக்கு படவாய்ப்புகள் பெருமளவில் குறைந்த நிலையில், பிக்பாஸ் சீசன் 2வில் போட்டியாளராக கலந்து கொண்டார். நடிகை மும்தாஜ் தற்போது சென்னை அண்ணாநகர் ஹெச் பிளாக் 2வது தெருவில் வசித்து வருகிறார்.
இவரது வீட்டில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 2 சிறுமிகள் கடந்த 6 வருடமாக வேலை பார்த்து வருகின்றனராம். இந்த நிலையில் ஒரு சிறுமி போலீசாருக்கு போன் செய்து, மும்தாஜ் தங்களை கொடுமைப்படுத்துவதாகவும், சொந்த ஊருக்கு செல்ல வேண்டும் என கேட்டதற்கு அனுப்பி வைக்க மறுப்பதாகவும் கூறியுள்ளார். அதனை தொடர்ந்து மும்தாஜ் வீட்டிற்கு விரைந்த போலீசார் சிறுமிகளை மீட்டு விசாரணை மேற்கொண்டு காப்பகத்தில் சேர்த்துள்ளனர்.
இந்த நிலையில் இரு சிறுமிகளும் 6 வருடமாக மும்தாஜ் வீட்டில் வேலை பார்க்கிறார்கள் என்றால் மைனர்களாக இருக்கும் போதே அவர்களை மும்தாஜ் வேலைக்கு வைத்துள்ளாரா? சிறுமிகளை வீட்டு வேலைக்கு வைப்பது சட்டப்படி குற்றம் என்பது மும்தாஜ்க்கு தெரியாதா? என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.