2.O திரைப்படத்தின் 4வது மேக்கிங் வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு...! வீடியோ இணைப்பு...!
2.0 making 4th video
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளியாக இருக்கும் படம் ‘2.O.’ லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் சங்கரின் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது, இதன் முதல் பாகம் "எந்திரன்" கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வசூல் சாதனை புரிந்தது. இந்நிலையில் இரண்டாம் பாகம் வெளியாவுள்ள நிலையில் இந்த பாகத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக எமிஜாக்சனும் வில்லனாக ஹிந்தி நடிகர் அக்ஷய்குமாரும் நடித்துள்ளனர். இப்படத்தை எதிர்வரும் நவம்பர் மாதம் 29ஆம் திகதி வெளியிட இருப்பதாக இயக்குனர் சங்கர் அவரது சமூக வலைதள பக்கத்தில் அதிகார பூர்வமாக அறிவித்தார்.
தற்போது இப்படத்தின் 4வது மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ள நிலையில், இதுவும் ரசிகர்களை மிகவும் கவர்ந்து இணையத்தில் வைரலாகி வருகிறது.
எனவே ‘2.O.’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மேலும் அதிகரித்து இந்த படத்திற்கு வலு சேர்க்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.