×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

2023-ஆம் ஆண்டு எதிர்பார்ப்பே இல்லாமல் வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படங்கள்.!

2023-ஆம் ஆண்டு எதிர்பார்ப்பே இல்லாமல் வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படங்கள்.!

Advertisement

கவின், அபர்ணாதாஸ் ஆகியோர் நடிப்பில் கணேஷ் கே பாபு இயக்கத்தில் இந்த வருடம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான திரைப்படம் தான் டாடா இந்த திரைப்படம் எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 4 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம், குழந்தை வளர்ப்பில் ஆண்களுக்கான முக்கியத்துவத்தை சொல்லும் ஒரு திரைப்படமாக இருந்தது.

மணிகண்டன் நடிப்பில் அறிமுக இயக்குனரான விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் ஒரு பீல் குட் மூவியாக வெளியானது தான் குட் நைட். இந்த திரைப்படம் குறட்டை பிரச்சினையை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. அதோடு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றது இந்த திரைப்படம் குறட்டை மையமாக வைத்து மிடில் கிளாஸ் மக்களின் வாழ்க்கை மற்றும் அவர்களுடைய உறவுகள் தொடர்பாக ஆழமாக பேசியது இந்த குட் நைட் திரைப்படம். மணிகண்டன் மீதா ரகுநாத், ரமேஷ் திலக் என்று படத்தில் நடித்த எல்லோருமே மிகவும் சிறப்பாக நடித்திருந்தார்கள்.அதோடு, இந்த திரைப்படம் பல பகுதிகளில் வெகு நாட்களுக்கு திரையிடப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரையில் ஒரு சில திரைப்படங்கள் வந்ததும் தெரியாது, போனது விதத்தில் ஓடிவிடும் ஆனால் வந்தது தெரியாமல் பார்க்கும் இடமெல்லாம் பேசுபொருளாக மாறிய திரைப்படம் தான் போர் தொழில். அசோக் செல்வன், சரத்குமார் ஆகியோர் நடிப்பில் அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தின் கிரைம், திரில்லர் திரைப்படமாக வெளியான போர் தொழில் திரைப்படம் தமிழ் சினிமாவில் வெகு காலத்திற்கு பிறகு பரபரப்பான திரை கதையை கொண்டிருந்தது என்று சொல்லலாம்.மேலும் இந்த திரைப்படம் இந்த ஆண்டில் 50 கோடி வசூல் செய்ததோடு, இந்த வருடத்தில் அதிகமாக வசூல் செய்த டாப் 10 திரைப்படங்களில் 10-வது இடத்தை பிடித்தது.

ஜோடியாக திரையரங்குகளுக்குள் சென்ற காதல் ஜோடிகளானாலும் சரி, தம்பதிகளானாலும் சரி படத்தை பார்த்துவிட்டு தங்களுடைய 2 கைகளை இறுகிப் பிடித்தபடி வெளியே வர வைத்த திரைப்படமென்றால், அது இறுதிச்சுற்று  திரைப்படம் தான். பொருளாதார ரீதியாக பல்வேறு சூழ்நிலையில் வாழும் 3 தம்பதிகளின் வாழ்க்கையை மையமாக வைத்து, திருமண உறவில் உண்டாகும் பிரச்சனைகள், அதற்கான காரணங்கள் மற்றும் அவற்றை எப்படி கையாள்வது? என்பது தொடர்பாக அனைத்தையும் வெட்ட வெளிச்சமாக எடுத்துரைத்த திரைப்படம் தான் இறுதிச்சுற்று

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா ஆகியோரின் நடிப்பில் வெளியான ஜிகர்தண்டா-2 திரைப்படம் யாரும் எதிர்பாராத விதத்தில், மாபெரும் வெற்றியடைந்தது. ஜப்பான் திரைப்படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்த சமயத்தில் நேர்மறையான விமர்சனங்கள் காரணமாக, பார்வையாளர்கள் தங்கள் பார்வையை ஜிகர்தண்டா-2 திரைப்படத்தின் மீது திருப்பினார்கள்.

ஒரு பார்க்கிங் பிரச்சனையை மையமாகக் கொண்டு, 2 மணி நேரத்திற்கு படம் எடுக்க முடியுமா? என்ற கேள்விக்கு தன்னுடைய திரை கதையின் மூலமாக பதிலளித்திருந்தார். அறிமுக இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன். சிறு, சிறு பிரச்சனையில் தான் ஒரு மனிதனின் முழுமையான சிறுமைத்தனமும் வெளிக்கொண்டுவரப்படும் என்பதை அருமையாக சொல்லியிருந்தார் இயக்குனர்.

இந்த திரைப்படத்தில் எம்.எஸ். பாஸ்கர் தன்னுடைய கதாபாத்திரத்தை மிக அருமையாக நடித்துக் கொடுத்தார். ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் அமைதியாக வந்து மாபெரும் வெற்றி பெற்றது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Dada #Goodnight #Parking #cinema #cinemanews
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story