ஜூலை 21ம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ள திரைப்படங்கள் என்னென்ன?; அசத்தல் லிஸ்ட் இதோ.!
ஜூலை 21ம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ள திரைப்படங்கள் என்னென்ன?; அசத்தல் லிஸ்ட் இதோ.!
ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைகளில் தமிழ் திரைப்படங்கள் ரிலீஸ் செய்யப்படும். நடப்பு வாரத்தில் 8 திரைப்படங்கள் திரையரங்கில் வெளியாகின்றன.
கொலை: விஜய் ஆண்டனி, ரித்திகா சிங், மீனாக்ஷி, சித்தார்த் சங்கர், ராதிகா, ஜான் விஜய், முரளி சர்மா உட்பட பலர் நடித்து வெளியாகவுள்ள திரைப்படம் கொலை. பாலாஜி குமார் இயக்கத்தில், தமிழ், கன்னடம், தெலுங்கு மொழிகளிலும் இப்படம் வெளியாகவுள்ளது.
அநீதி: அர்ஜுன் தாஸ், துஷாரா விஜயன், சாரா அர்ஜுன், வனிதா, புகழ், காளி வெங்கட், அறந்தாங்கி நிஷா உட்பட பலர் நடித்து வெளியாகவுள்ள திரைப்படம் அநீதி. வசந்தபாலன் இயக்கத்தில் படம் வெளியாகவுள்ளது.
சத்திய சோதனை: சுரேஷ் சங்கையா இயக்கத்தில், ரேஷ்மா, பிரேம்ஜி, ஸ்வயம் உட்பட பலர் நடித்து 21 ம் தேதி திரையில் சத்திய சோதனை திரைப்படம் வெளியாகிறது.
வசந்த மாளிகை (மறு வெளியீடு): கடந்த 1972ம் ஆண்டு சிவாஜி கணேஷன், பண்டாரி பாய், நாகேஷ், ஸ்ரீதேவி உட்பட பலர் நடித்து வெளியான திரைப்படம் வசந்த மாளிகை. இப்படம் மீண்டும் டிஜிட்டல் முறையில் மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது.