21வது சென்னை சர்வதேச திரைப்பட விழா இன்று தொடக்கம்.!
21வது சென்னை சர்வதேச திரைப்பட விழா இன்று தொடக்கம்.!
21வது சென்னை சர்வதேச திரைப்பட விழா இன்று தொடங்குகிறது.
இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் சார்பில் நடக்கும் 21வது சென்னை சர்வதேச திரைப்பட விழா இன்று முதல் டிசம்பர் 21ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த விழா கடந்த 2003ம் ஆண்டிலிருந்து, ஒவ்வொரு ஆண்டும் சென்னை சர்வதேச திரைப்பட விழாவானது நடத்தப்பட்டு வருகிறது.
இந்த விழாவில் சர்வதேச அளவிலும், இந்திய அளவிலும் சிறந்த திரைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டு திரையிடப்படும். இதில், தேர்வாகும் சிறந்த திரைப்படங்களுக்கு, சிறப்பு விருதுகள் வழங்கப்படுகிறது.
இந்த விழாவில் தமிழ் திரைப்படங்களான அநீதி, அயோத்தி, கருமேகங்கள் கலைகின்றன, மாமன்னன், போர் தொழில், ராவண கோட்டம், சாயாவனம், செம்பி, ஸ்டார்ட் கேமரா ஆக்சன், உடன்பால், விடுதலை, விந்தியா விக்டிம் வெர்டிக்ட் வி3 ஆகிய திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன.