இரண்டாவது நாளிலும் கல்லாகட்டும் 2.0! எத்தனை கோடி தெரியுமா?
2pointo movie second day collection
பிரமாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 படம் இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இதுவரை இல்லாத அளவில் அணைத்து வசூல் சாதனைகளையும் முறியடித்துள்ளது 2.0 திரைப்படம்.
இதற்கு முன்னர் சர்க்கார் திரைப்படம் சென்னையில் முதல்நாள் வசூலில் முதல் இடத்தில் இருந்தது. தற்போது அந்த இடத்தை 2.0 திரைப்படம் முறியடித்துள்ளது.
ஆரம்பத்தில் இருந்தே 2.0 பல சாதனைகள் செய்து வரும் இந்த திரைப்படம் தற்போது இரண்டாவது நாள் வசூலிலும் மாபெரும் சாதனை படைத்துள்ளது.
இரண்டாவது நாளில் 2.0 படம் சென்னையில் 2.13 கோடி பிரம்மாண்ட வசூல் பெற்றுள்ளது. சென்னையில் மட்டும் 2 நாளில் 4.77 கோடி வசூல் வந்துள்ள நிலையில், அடுத்த இரண்டு நாட்கள் விடுமுறை நாட்கள் என்பதால் வசூல் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.