சாதனை படைத்த கமல், அஜித் மற்றும் விஜய்...! ரசிகர்கள் கொண்டாட்டம்...!
3-actor-record-break-this-week
தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமாக வளம் வரும் நடிகர்கள் ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா போன்றவர்கள்... இவர்களின் படங்கள் திரைக்கு வந்தாலே ரசிகர்கள் மத்தியில் கொண்டாட்டம் களைகட்டும் என்பது தான் உண்மை. மேலும் இவர்கள் அனைவருமே சினிமாவில் மட்டுமே திறமையை காட்டவில்லை. வேறு வேறு துறைகளிலும் அவர்களின் சாதனையை படத்தைக்கொண்டு தான் இருக்கிறார்கள். இந்நிலையில் இந்த வாரம் மட்டும் மூன்று நடிகர்கள் சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன் விவரம் வருமாறு:
நடிகர் கமல் அவர்கள் SMARTIES INDIA என்பதில் கமல்ஹாசனின் மையம் விசில் ஆப் என்பது வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அது நடிகர் கமல்ஹாசனின் ரசிகர்கள் மத்தியில் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
மற்றொரு நடிகர் தளபதி விஜய் அவர்கள் தான். தளபதி விஜய் அவர்கள் சர்வதேச அளவில் சிறந்த நடிகர் என்ற விருதை பெற்றுள்ளார். இந்த விருதிற்கு காரணம் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் வெளிவந்த "மெர்சல்" படம் தான் முழுக்க முழுக்க காரணம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நடிகர் தல அஜித் அவர்களின் தக்சா குழுவினர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஒரு போட்டியில் இரண்டாவது இடம் பிடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் தல ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள்.