4500 பேருக்கு லியோ இலவச டிக்கெட்.. தனியார் மருத்துவமனை செய்த நெகிழ்ச்சி சம்பவம்.!
4500 பேருக்கு லியோ இலவச டிக்கெட்.. தனியார் மருத்துவமனை செய்த நெகிழ்ச்சி சம்பவம்.!
தமிழ் சினிமாவில் முன்னாடி நடிகரான தளபதி விஜய் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துள்ள லியோ திரைப்படம் கடந்த அக்டோபர் 19ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்களில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்று வருகிறது.
இந்தப் படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் நடிகர் விஜய் உடன் த்ரிஷா, கௌதம் மேனன், மன்சூர் அலிகான், மிஷ்கின், டான்ஸ் மாஸ்டர் சாண்டி உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடித்துள்ளனர்.
லியோ திரைப்படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் 148 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ள நிலையில், இதுவரை 200 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சென்னை தனியார் மருத்துவமனையில் புற்றுநோயிலிருந்து மீண்டவர்கள் குடும்பத்தினர் மருத்துவர்கள் செவிலியர்கள் ஊழியர்கள் என மொத்தம் 4500 பேருக்கு விஜயின் லியோ படத்திற்கான இலவச டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனையில் இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.