இன்று (ஜனவரி 05, 2024) திரையரங்கில் வெளியான தமிழ் படங்கள் என்னென்ன?: லிஸ்ட் இதோ.!
இன்று (ஜனவரி 05, 2024) திரையரங்கில் வெளியான தமிழ் படங்கள் என்னென்ன?: லிஸ்ட் இதோ.!
2024 புத்தாண்டின் தொடக்கத்திற்கு பின், முதல் வாரம் வெள்ளிக்கிழமையான இன்று, ஜனவரி 05ம் தேதி தமிழில் 4 படங்கள் வெளியீடு செய்யப்படுகின்றன.
திரைப்பட ரசிகர்களுக்கும், வார இறுதியில் படத்திற்கு செல்ல நினைப்போருக்கு இத்தகவல் பிரத்தியேகமாக வழங்கப்பட்டுள்ளது. அதனை தெரிந்துகொள்ள தொடர்ந்து படிக்கவும்.
1. அரணம் (Aranam): தமிழ் திரைக்கூடம் தயாரித்து வழங்கும் அரணம் படத்தில், பாடலாசிரியர் பிரியன், லகுபரன், வர்ஷா, கீர்த்தனா உட்பட பலரும் நடித்துள்ளனர். பிரியனின் இயக்கத்தில், சாஜன் மாதவ் இசையில், ராம்சிவா, ஸ்ரீசெல்வி ஒளிப்பதிவில் படம் இன்று திரையரங்கில் வெளியாகியுள்ளது.
2. கும்பாரி (Kumbari): ராயல் என்டர்ப்ரைசஸ் தயாரித்து வழங்கும் கும்பாரி படத்தில், விஜய்விஷ்வா, நலீஃப், மஹானா சஞ்சீவி, ஜான் விஜய், பருத்திவீரன் சரவணன், சாம்ஸ், மதுமிதா, சைந்தி, காதல் சுகுமார் உட்பட பலரும் நடித்துள்ளனர். கெவின் ஜோசப் இயக்கத்தில், ஜெய்பிரகாஸ், ஜெய்டன், பிரிதிவி ஆகியோரின் இசையில் படம் உருவாகியுள்ளது.
3. உசிரே நீதாண்டி (Usure Neethandi): ஆகாஷ் சுதாகர் இயக்கத்தில், நடிகர்கள் சந்தோஷ் ஆனைமலை, போண்டா மணி, மெர்சல் பாரதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் உசிரே நீதாண்டி. நந்த கோபன் இசையில், டிஎஸ் பிலிம் பேக்டரி தயாரிப்பில் படம் உருவாகியுள்ளது.
4. எங்க வீட்டுல பார்ட்டி (Enga Veetula Party): சுரேஷ் கண்ணா இயக்கத்தில், கோபி ஸ்ரீ இசையில், முன்னணி திரைப்பட நட்சத்திரங்கள் நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் எங்க வீட்டுல பார்ட்டி. முகநூலினால் ஏற்படும் ஆபத்துகள் தொடர்பான கதையம்சமாக படம் வெளியாகியுள்ளது.