எவண்டா இந்த வேலையை பார்த்தது? இந்த போட்டோ பார்த்து த்ரிஷாவே ஷாக் ஆகிட்டாங்க!
96 movie jaanu dress goes viral on internet
பள்ளிப்பருவ காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் 96. படத்தில் விஜய் சேதுபதியும், த்ரிஷாவும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருக்கின்றனர். இந்தத் திரைப்படத்துக்கு பல தரப்பு மக்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். பலர் தங்களுடைய பழைய காதல் நினைவுகள் மீண்டும் இந்த திரைப்படம் நினைவு படுத்தியதாக கூறி இருந்தனர்.
தித்யா பாஸ்கர் மற்றும் கெளரி இருவரும் பள்ளிப்பருவ கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். விஜய் சேதுபதி, த்ரிஷா ஜோடிக்கு இணையாக இவர்களின் ஜோடியும் பலராலும் பேசப்பட்டது.
படத்தின் எந்தவொரு இடத்திலும் த்ரிஷா ஆபாச உடையில் வரமாட்டார். படம் முழுக்க சுடிதாரும் அதற்கேற்ப துப்பட்டாவையும் மடித்து போட்டிருப்பார். இதுவே படத்தின் காதலை தூக்கிக் காட்டியது. இதனால் த்ரிஷா அணிந்திருந்த உடைகளும் பெரிதும் பேசப்பட்டது. மேலும் படத்தில் த்ரிஷா அணிந்திருந்த உடை தற்போது மிகவும் ட்ரெண்டாகிவருகிறது.
இந்நிலையில் இந்த ஜானு ட்ரெஸ்ஸை. மோனலிசா போட்டுள்ளது போல் ஒரு புகைப்படத்தை நடிகை த்ரிஷாவும் தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். இதை பார்த்து பல ரசிகர்கள் இந்த வேலையா யாருப்பா பார்ததுனு கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
அந்த புகைப்படம் இதோ: