96 பட குட்டி ஜானுவா இது! என்னம்மா மாறிட்டாங்க! லேட்டஸ்ட் புகைப்படங்களால் வாயடைத்துப்போன ரசிகர்கள்!
96 movie janu latest image released
கடந்த ஆண்டு பிரேம்குமார் இயக்கத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற படம் 96. இப்படம் மாபெரும் வெற்றி பெற்று வசூல் சாதனையும் குவித்தது. பள்ளி பருவ காதலை மையமாக கொண்டு உருவான இந்த படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாகவும், திரிஷா கதாநாயகியாகவும் நடித்திருந்தார்.
மேலும் இவர்களது இளமை பருவ தோற்றத்தில், பள்ளிபருவத்தில் ஆதித்யா மற்றும் கௌரி கிஷான் ஆகியோர் நடித்திருந்தார். இவர்கள் இருவரின் நடிப்பும் நல்ல வரவேற்பை பெற்றதோடு ஒரே படத்தில் இருவரையும் புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது.
அதிலும் குட்டி ஜானுவாக, பள்ளி சீருடையில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் கௌரி கிஷான். அவரது நடிப்பு பலராலும் பெருமையாக பேசப்பட்டது. மேலும் பலருக்கும் அவர்களது இளமை காலத்தை நினைவுக்கு கொண்டு வந்தது. அதனை தொடர்ந்து அவர் தற்போது அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் 96 படத்தில் பள்ளி பருவ பெண்ணாக, பள்ளி சீருடையில் வலம்வந்த கிஷான் தற்போது மாடர்னாக அழகிய போட்டோஷூட் நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்கள் வைரலான நிலையில் அதனை கண்ட ரசிகர்கள் குட்டி ஜானுவா இது என ஆச்சரியம் அடைந்துள்ளனர்.