ஜப்பான் திரைப்படத்தால் புலம்பும் தயாரிப்பாளர்.! அந்த விஷயத்திலும் சிக்கலா.?
ஜப்பான் திரைப்படத்தால் புலம்பும் தயாரிப்பாளர்.! அந்த விஷயத்திலும் சிக்கலா.?
நடிகர் கார்த்தியின் 25வது படமான ஜப்பான் கடந்த 10ம் தேதி வெளியானது. ராஜுமுருகன் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்திருந்தது. ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருந்தார். அனு இம்மானுவேல், சுனில் உள்ளிட்டோர் முக்கிய.வேடங்களில் நடித்திருந்தனர். இந்த திரைப்படம் அதீத எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியாகியிருந்தது.
இந்த திரைப்படம் வெளியான நாள் முதலே நெகட்டிவான விமர்சனங்களை பெற்றது. இதன் காரணமாக, இந்த திரைப்படத்திற்கு அதிக வசூல் இல்லை. முதல் நாளில் 4 கோடி ரூபாயும், 2வது நாளில் 3 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்தது.அதேபோல தீபாவளி தினத்தன்று 4 கோடி ரூபாய்க்கு மேல் அந்த திரைப்படம் வசூல் செய்யவில்லை. ஆனால் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இதுவரையில் ஜப்பான் திரைப்படம் 14 கோடி ரூபாய் வரையில் மட்டுமே வசூல் செய்திருப்பதாக தெரிகிறது. ஆகவே ஜப்பான் திரைப்படத்தின் தயாரிப்பாளருக்கு 30 கோடி ரூபாய் வரையில் நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. சென்ற வருடம் கார்த்தியின் நடிப்பில் வெளியான சர்தார் தியேட்டர் ஷேரிங் மூலமாக 25 கோடி ரூபாய் வரையில் லாபம் சம்பாதித்து கொடுத்தது. அதேபோல சாட்டிலைட் ரைட்ஸும் அமோகமாக விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் தான், ஜப்பான் திரைப்படத்திற்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்காததால், சேட்டிலைட் ரைட்ஸ் விற்பனை செய்யப்படுவதிலும் சிக்கல் எழுந்துள்ளதாக தெரிகிறது. ஆகவே பாக்ஸ் ஆபிஸ், சேட்டிலைட் ரைட்ஸ் உள்ளிட்டவை மூலமாக ஒட்டுமொத்தமாக 30 கோடி ரூபாய் வரையில் நஷ்டமடைந்திருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன. கார்த்தியின் சினிமா பயணத்தில் இது மிகப்பெரிய தோல்வியாக கருதப்படுகிறது.