இயக்குனர் முருகதாஸின் மனைவி மற்றும் குழந்தைகளை பார்த்துள்ளீர்களா! தீயாய் பரவும் புகைப்படம்
A. R. Murugathas family photo
ஏ.ஆர்.முருகதாஸ் பல வெற்றி படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக இருந்து வருகிறார். அதிலும் விஜயை வைத்து இரண்டு மெகா ஹிட் படங்களை கொடுத்து விஜய் ரசிகர்களை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர்.
இவரின் முதல் படம் தல அஜித் அவர்களை வைத்து இயக்கிய தீனா படம் இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகினார். இரண்டாவது படம் நடிகர் விஜயகாந்த் அவர்களை வைத்து இயக்கிய ரமணா. இந்த ரமணா படம் தெலுங்கு மற்றும் கன்னடத்தில் மறுஆக்கம் செய்துள்ளார். இதுபோன்று மேலும் பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.
மேலும் இவர் எஸ்.ஜெ.சூர்யாவிடம் வாலி, குஷி போன்ற படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழித் திரைப்படங்கள் இயக்கி வருகிறார்.
இந்நிலையில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து தர்பார் என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படம் வரும் பொங்கலுக்கு ரிலீசாக உள்ளது. இந்நிலையில் தற்போது முருகதாஸின் மனைவி மற்றும் குழந்தைகள் புகைப்படமான சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகின்றது.