அமலாபாலின் ஆடை படத்திற்கு ஏற்பட்ட சிக்கல்! படம் வெளியாகததால் ரசிகர்கள் அதிருப்தி
aadai realise date changed
இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் அமலா பால் முன்னணி ரோலில் நடித்துள்ள படம் ஆடை. பிரதீப் குமார் இசையமைத்துள்ளார். த்ரில்லர் கதையை மையப்படுத்திய இப்படத்தில், அமலா பால் உடன் இணைந்து பிஜிலி ரமேஷ், விவேக் பிரசன்னா ஆகியோர் பலர் நடித்துள்ளனர்.
தமிழில் வேறு எந்த நடிகையும் இந்த அளவுக்கு கவர்ச்சியாக நடித்ததில்லை என்று பேசினார்கள். இந்தி நடிகைகளை மிஞ்சும் அளவுக்கு ஆடை குறைப்பு செய்துள்ளதாகவும் விமர்சனங்கள் கிளம்பின. இந்த படத்தில் நடிப்பது குறித்து அமலாபால் கூறும்போது, “வித்தியாசமாக களம் கொண்ட உணர்வுப்பூர்வமான கதை. எனது கதாபாத்திரத்தை கேட்டபோது எனக்கு மிகவும் பிடித்திருத்தது. மேலும் இது எனக்கு ஒரு புதுமாதிரியான படமாக இருக்கும் என்றார்.
இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் வெளியான இந்தப் படத்தின் டீசரில் ஆடையில்லாத அமலாபால், பெண்களின் லிப் லாக் என பல அதிர்ச்சிகரமான காட்சிகள் இடம்பெற்றன. ஏற்கனவே இந்த படத்திற்கு A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று ஆடை படம் வெளியாகாது என புதிய தகவல் எழுந்துள்ளது.அதற்கு காரணம் தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட பைனான்ஸ் பிரச்சனை தான் காரணமாம்.இதன் காரணமாக தியேட்டர்களுக்கு சென்று சேர வேண்டிய கேடிஎம்கள் இன்னும் சென்று சேரவில்லை. இதனால் படம் வெளியாகவில்லை. படத்தை காண ஆவலுடன் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து இருந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இதுகுறித்து படக்குழுவினரிடம் கேட்டதற்கு பைனான்ஸ் பிரச்சினையால் ரிலீஸாகவில்லை. எப்படியும் இன்று அனைத்து பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டு படம் ரிலீசாகும் என்று கூறியுள்ளனர்.