ஓவியா-ஆரவ் காதல் பற்றி விளக்கமளித்துள்ள நடிகர் ஆரவ். இதுதான் உண்மையாக இருக்குமோ..
aarav oviya no love only friends said aarav
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன்-1 போட்டியாளர்களாக கலந்து கொண்டவர்களில் முக்கியமானவர்கள் நடிகை ஓவியா மற்றும் ஆரவ்.
நிகழ்ச்சி நடைபெற்றது கொண்டிருந்த சமயத்தில் மிகவும் பிரபலமாக ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டவர்கள். இந்த நிலையில் சீசன்-1 வெற்றியாளராக ஆரவ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில் நடிகை ஓவியா-ஆரவ் காதலிப்பதாக இருவரின் புகைப்படங்கள் அவ்வப்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இருந்தாலும் சீசன்-1வெற்றிக்கு பிறகு நடிகர் ஆரவ்வுக்கு படவாய்ப்புகள் குவிந்து வருகின்றன. தற்சமயம் ராஜபீமா என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து மேலும் பல படங்கள் காத்திருக்கின்றன.
இதுகுறித்து சமீபத்தில் பேசிய அவர், தற்போது ராஜபீமா என்கிற படத்தில் நடித்து வருகிறேன். இன்னும் அடுத்தடுத்து நடிக்கும் படங்கள் குறித்த அறிவிப்புகள் தொடர்ந்து வெளிவரும்.
காதலில் விழும் இளைஞனாக என்னை நடிக்கச்சொல்லி பலரும் கேட்கின்றனர். இது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. ஓவியா உடன் இணைந்து விரைவில் படம் நடிக்கும் வாய்ப்பு இருக்கிறது.
சமீபத்தில் நடைபெற்ற எனது பிறந்தநாளுக்கு ஓவியா நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தார். சிம்பு, பிந்து மாதவி உள்ளிட்டோரும் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.
ஓவியா உடன் எனக்கு காதல் என்பதெல்லாம் சுத்த பொய். அவர் எனக்கு நல்ல தோழி மட்டுமே. விரைவில் நாங்கள் சேர்ந்து நடிக்கும் பட அறிவிப்பு வெளிவரலாம் என்று ஆரவ் தெரிவித்தார்.