ஆசை படத்தில் நடித்த சுவலக்ஷ்மி இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா? புகைப்படம்!
Aasai movie actress suvalakshmi current photo
தமிழ் சினிமாவில் பிரபலமான நாடிகளில் ஒருவர் சுவலட்சுமி. விஜய், அஜித் போன்ற தமிழ் சினிமாவின் பிரபலங்களுடன் பல்வேறு படங்களில் நடித்துள்ளார் சுவலட்சுமி. கடந்த 1995 ஆம் ஆண்டு, இயக்குனர் வசந்த் இயக்கத்தில் மணிரத்னம் தயாரிப்பில் ஆசை என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் சுவலட்சுமி. சுவலட்சுமியின் முதல் படமே, இவரின் திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.
ஆசை படத்தை அடுத்து வெறும் கவர்ச்சி, ஆடல், பாடல் என்றும் மட்டும் இல்லாமல் கதைக்கும் கதாபாத்திரத்திற்கும், முக்கியத்துவம் கொண்ட குடும்ப பாங்கான வேடங்களை தேர்வு செய்து நடித்தார் சுவலட்சுமி. இதானால் தமிழ் ரசிகர்கள் மத்தியில் இவருக்கென ஒரு நற்பெயர் ஏற்பட்டது. அதன்பின்னர் விஜயுடன் 'லவ் டுடே', ' நிலாவே வா' உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்கள் மனதை கொள்ளைகொண்டார்.
கடைசியாக 2003 ஆம் ஆண்டு 'நதி கரையினிலே' என்கிற படத்தில் நடித்தார். இதற்காக தமிழ்நாடு ஸ்டேட் பிலிம் அவார்டு அவருக்கு வழங்கப்பட்டது. மேலும் சூலம் என்கிற சீரியலிலும் நடித்தார்.
அதன்பின்னர் படவாய்ப்புகள் சரியாக அமையாததால் குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்த தொடங்கிய இவர் திருமணம் செய்துகொண்டு வெளிநாட்டில் செட்டிலாகிவிட்டார். இந்நிலையில் நடிகை சுவலட்சுமி கணவருடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.