அடேங்கப்பா! மறுபடியும் ஆரம்பமா...பிக்பாஸ் அபிராமி வெளியிட்ட புகைப்படத்தால் கலாய்த்து தள்ளும் ரசிகர்கள்!! ஏன் தெரியுமா?
abirami meet muken family
பிக்பாஸ் சீசன் மூன்று விறுவிறுப்பாக நடந்துவருகிறது. சீசன் 3 இதுவரை 80 நாட்களை நெருங்கிவிட்ட நிலையில் இந்த முறை பிக்பாஸ் பட்டத்தை வெல்லப்போகும் அந்த பிரபலம் யார் என தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். 16 பிரபலங்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது 8 பேர் மட்டுமே உள்ளனர்.
கடந்த வாரம் எலிமினேஷன் உண்டு என கூறிய கமல் இயக்குனர் சேரன் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்படுவதாக கூறினார். அதன்பின்னர் பிக்பாஸ் அவருக்கு சீக்ரெட் ரூம் செல்லும் வாய்ப்பை வழங்கினார்.
இந்நிலையில் நேற்று முதல் பிக்பாஸ்ஸில் புதிய டாஸ்க் தொடங்கப்பட்டது. அதில் போட்டியாளர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் வருகை தரவுள்ளனர். அதனை தொடர்ந்து நேற்றே முகேன் அம்மா மற்றும் தங்கை விருந்தினராக உள்ளே வந்தனர். இவ்வாறு நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியான அபிராமி முகேன் அம்மா மற்றும் தங்கையை சந்தித்துள்ளார்.அபிராமிக்கு முகேன் மீது காதல் ஏற்பட்டு அந்த விவகாரம் பெரும் சர்ச்சையானது.
இந்நிலையில் அபிராமி முகெனின் குடும்பத்தினரை சந்தித்த புகைப்படம் வைரலாக நிலையில் நெட்டிசன்கள் கிண்டல் செய்து கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.