சமூகவலைத்தளங்களில் பாடாய்படுத்தும் போலிக்கணக்குகள்! கடுப்பாகி பிக்பாஸ் அபிராமி எடுத்த அதிரடி முடிவு!
Abirami releave from tiktok for fake account problem
பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன்3யில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் அபிராமி. இவர் பிக்பாஸ் வருவதற்கு முன்பு பல விளம்பரங்களில் நடித்துள்ளார். மேலும் சில நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார். அதுமட்டுமின்றி நடிகை அபிராமி அஜித் நடிப்பில் வெளிவந்த நேர்கொண்டபார்வை திரைப்படத்திலும் நடித்திருந்தார்.
அதனைத்தொடர்ந்து பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய அபிராமி தற்போது படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் அவர் தற்போது நடிகர்ஆரி நடிக்கும் திரைப்படத்தில் நடித்துவருகிறார். அதில் லாஸ்லியாவும் நடிக்கிறார்.
மேலும் சமூகவலைதளங்களில் எப்பொழுதும் பிசியாக இருக்கும் அபிராமி அவ்வப்போது வித்தியாசமான போட்டோஷூட் நடத்தி தனது புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருந்தார். இந்நிலையில் அவரது பெயரில் டிக்டாக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏராளமான போலியான கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளது.இதன் பதிவுகளால் அபிராமி மீது மோசமான விமர்சனங்கள் எழுந்தது. இதனால் அவர் பெரும் அதிருப்தி அடைந்துள்ளார்.
இந்த நிலையில் நடிகை அபிராமி தான் டிக்டாக்கிலிருந்து அசல் கணக்கை நீக்கி, விலகுவதாக தெரிவித்துள்ளார். மேலும் இன்ஸ்டாகிராமில் இருந்தும் விரைவில் வெளியேறி விடுவேன் எனவும் அறிவித்துள்ளார்.