ரசிகர்கள் செய்த செயலால் நடிகையுடன் ஓட்டம் பிடித்த ஆர்யா.. என்ன நடந்தது.?
ரசிகர்கள் செய்த செயலால் நடிகையுடன் ஓட்டம் பிடித்த ஆர்யா.. என்ன நடந்தது.?
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் ஆர்யா. இவர் தமிழில் பல திரைப்படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். ரசிகர்களின் மனதை கவர்ந்து சாக்லேட் பாய் எனும் பெயர் பெற்றவர். சமீபத்தில் நடிகை சாய்ஷாவை திருமணம் செய்து கொண்டு பெண் குழந்தைக்கு தகப்பன் ஆனார்.
இது போன்ற நிலையில், ஆர்யா தற்போது 'காதர் பாட்ஷா என்கிற முத்துராமலிங்கம்' திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். சித்தி இத்னானி கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு முத்தையா இயக்கி வருகிறார். வருகிற ஜூன் இரண்டாம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
இதனை தொடர்ந்து இப்படத்தின் ப்ரோமோஷன் மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சேலத்தில் நடைபெற்றது அங்கு சென்ற நடிகர் ஆர்யா மற்றும் சித்தி இத்னானி மேடையில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது ஆர்யாவுடன் புகைப்படம் எடுக்க ரசிகர்கள் அலைபாய்ந்து கொண்டிருந்தனர்.
பவுன்சர்கள் தடுப்பதை மீறியும் மேடையில் ஏறி சித்தி மற்றும் ஆர்யாவுடன் புகைப்படம் எடுக்க முந்தியடித்து ஓடி வந்தனர். இதனால் ஆர்யா மற்றும் நடிகை சித்தி இத்னானியுடன் மேடை விட்டு கீழே இறங்கி ஓட்டம் பிடித்தார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.