சமூக வலைதளங்களில் அடக்கி வாசிக்கும் சித்தார்த்.. பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பதிலளித்த சித்தார்த்.!
சமூக வலைதளங்களில் அடக்கி வாசிக்கும் சித்தார்த்.. பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பதிலளித்த சித்தார்த்.!
கோலிவுட் திரை உலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் சித்தார்த். பல திரைப்படங்களில் நடித்து வெற்றிப்படங்களை தமிழ் சினிமாவிற்கு அளித்து தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை பிடித்துள்ளார். ஆண் ரசிகர்களை விட பெண் ரசிகைகள் தான் சித்தார்த்திற்கு அதிகமாக உள்ளனர்.
தமிழ் சினிமாவின் சாக்லேட் பாய் சித்தார்த், சில வருடங்களாக திரைப்படங்களில் நடிக்காமல் இருந்தார். தற்போது மீண்டும் சினிமாவில் களமிறங்கிய சித்தார்த் 'டக்கர்' எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். ஜூன் 9 ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கிய படத்தில் சித்தார்த், யோகி பாபு போன்றவர்கள் நடித்துள்ளனர். திவ்யா கதாநாயகியாக நடித்திருக்கிறார். மேலும் இப்படத்தின் புரமோஷன் வேலைகளில் படக்குழு ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் சமீபத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட சித்தார்த்திடம் பத்திரிக்கையாளர்கள், இப்போது ஏன் சமூக பிரச்சினைகளுக்கு குரல் கொடுப்பதில்லை என்று கேள்வி கேட்டனர். அதற்கு பதிலளித்த சித்தார்த் "என்னை நம்பி தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் உள்ளனர். இதனால் தான் சமூக வலைதளங்களிலிருந்து அமைதியாகிவிட்டேன்" என்று கூறினார்.