ஆக்ஷன் கிங் அர்ஜுனின் இளைய மகளா இது! வாவ்.. செம கியூட்டா இருக்காரே! வைரலாகும் புகைப்படம்!!
ஆக்ஷன் கிங் அர்ஜுனின் இளைய மகளா இது! செம கியூட்டா இருக்காரே! வைரலாகும் புகைப்படம்!!
தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நடிகர் அர்ஜுன். அவர் தேசப்பற்று மிக்க, சமூக கருத்துகளை கொண்ட எக்கச்சக்கமான திரைப்படங்களில் நடித்து ரசிகர்களால் ஆக்சன் கிங் என அழைக்கப்பட்டார்.
ஹீரோ, வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம் என பலவற்றிலும் நடித்த அவர் தொகுப்பாளராக அவதாரம் எடுத்து சர்வைவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இந்நிகழ்ச்சி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. நடிகர் அர்ஜுனுக்கு ஐஸ்வர்யா, அஞ்சனா என இரு மகள்கள் உள்ளனர். இவர்களில் ஐஸ்வர்யா, விஷால் நடிப்பில் வெளிவந்த பட்டத்து யானை படத்தில் அவருக்கு ஜோடியாக, ஹீரோயினாக நடித்திருந்தார்.
பிரபலத்தின் மகள் என்பதால் அவருக்கு பட வாய்ப்புகள் குவியும் என எதிர்பார்த்த நிலையில் அவ்வாறு பெரியளவில் வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் அண்மையில் அர்ஜூனின் மகள் அஞ்சனாவிற்கு பிறந்தநாள் கொண்டாடப்பட்டுள்ளது. இதில் குடும்பத்தினர் அனைவரும் கலந்து கொண்டுள்ளனர். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.