நெட் ஃப்லிக்ஸ் நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு.! ரசிகர்கள் அதிர்ச்சி.!
நெட் ஃப்லிக்ஸ் நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு.! ரசிகர்கள் அதிர்ச்சி.!
பொதுமக்களின் முக்கிய பொழுதுபோக்கு அம்சங்களில் ஒன்றாக திரைத்துறை இருக்கிறது. அதிலும் அதிநவீன தொழில்நுட்பங்கள் கொண்டுவரப்பட்டு வருகின்றன. அந்த விதத்தில், ஓ.டி.டி தளம் என்ற புதிய தொழில்நுட்பத்திற்கு ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு காணப்படுகிறது.
இத்தளத்தில் வெளியாகும் நிகழ்ச்சிகள், நெடுந்தொடர்கள், திரைப்படங்கள் ஆகியவை உலகெங்கிலும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக மத்திய தணிக்கை வாரியம் தணிக்கை செய்த பின்னரே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியிடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
ஆகவே ரசிகர்கள் அனைத்து திரைப்படங்களையும் ஓ.டி.டி-யில் பார்ப்பதற்கு விரும்புகிறார்கள். இதன் காரணமாக, மத்திய அரசு ஓ.டி.டி தலங்களில் வெளியாகும் திரைப்படங்களில் எச்சரிக்கை வாக்கியங்கள் இடம்பெற வேண்டும் என்று ஏற்கனவே கட்டுப்பாடு விதித்திருந்தது.
இந்த சூழ்நிலையில்தான் நெட்ஃப்லிக்ஸ் நிறுவனம் எடுத்துள்ள ஒரு அதிரடி முடிவால், இந்திய ரசிகர்கள் அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள். மத்திய தணிக்கை வாரியத்தால் தணிக்கை செய்யப்பட்ட இந்திய திரைப்படங்களை மட்டுமே சர்வதேச அளவில் வெளியிட நெட் பிலிக்ஸ் நிறுவனம் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இனி வரும் திரைப்படங்களில் இந்த புதிய விதிமுறைகள் பின்பற்றப்படும் என்றும் அந்த நிறுவனம் கூறியிருக்கிறது.